ஏய் எழுந்திரு…. இங்க ஏன் வந்த? ஷூட்டிங்கில் சோறு கூட கிடைக்காமல் விஜய்சேதுபதி!

 
ஏய் எழுந்திரு…. இங்க ஏன் வந்த? ஷூட்டிங்கில் சோறு கூட கிடைக்காமல் விஜய்சேதுபதி!

விஜய் சேதுபதியின் அறிமுகம்:

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதி எந்த ஒரு சினிமா பின்பலமும் இல்லாமல் திரைத்துறையில் நுழைந்து இன்று தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

ஏய் எழுந்திரு…. இங்க ஏன் வந்த? ஷூட்டிங்கில் சோறு கூட கிடைக்காமல் விஜய்சேதுபதி!

ஆனால், இன்று அவர் இந்த இடத்தை பிடிக்க எவ்வளவு கஷ்டங்கள்… அவமானங்கள் பட்டார் என்பதை குறித்து திரை பிரபலம் ஒருவர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மரியாதையே இருக்காது:

ஒரு இயக்குனர் அல்லது தயாரிப்பாளர் குடும்பத்திலிருந்து அறிமுக நடிகராக திரைத்துறைக்கு வருபவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். குறிப்பாக அவர் நடந்து வரும்போது இரண்டு பேர் குடை பிடிப்பார்கள். அந்த நபர் எப்போதும் கேரவனினிலே சகல வசதிகளோடு இருப்பார்.

அவருக்கு தேவையான அணைத்து வசதிகளும் தயாரிப்பு தரப்பில் செய்து கொடுக்கப்படும். அந்த திரைப்படம் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் முடித்துக் கொடுப்பார்கள். ஆனால், அதுவே ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்டா உள்ளே நுழையும் விஜய் சேதுபதி போன்ற ஒரு நபர் அவ்வளவு ஈசியாக சினிமாவில் ஜெயித்திட முடியாது.

சோறு கூட கிடைக்காமல்….

100 பேர் நடிக்கும் கூட்டத்தில் ஒருவனாக தான் அவர்கள் தெரிய முடியும். அதிலும் திரையில் கூட தன்னுடைய முகம் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக மறைந்தபடியே நிற்பார்கள். அவ்வளவு ஏன் சூட்டிங் சாப்பாடு வரும்போது ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக எங்களால் உள்ளே போய் அமர்ந்து சாப்பிட கூட முடியாது.

ஏய் எழுந்திரு…. இங்க ஏன் வந்த? ஷூட்டிங்கில் சோறு கூட கிடைக்காமல் விஜய்சேதுபதி!

இந்த லைன்ல நீ ஏன் வந்த? உனக்கு இங்க என்ன வேலை? என்று சாப்பிடும் கையோடு விரட்டி அடிப்பார்கள். அதுதான் எங்களுக்கான மரியாதை.

ஆனால் அதே ஜூனியர் ஆர்டிஸ்ட் முட்டி மோதி தனது திறமையால் உயர்ந்த அந்தஸ்துக்கு சென்று விட்டால் அவரை அசைக்க முடியாது. அந்த இடத்தில் தான் தற்போது விஜய் சேதுபதி இருக்கிறார் என "கருப்பு" படத்தின் பிரபலம் ஒருவர் நேர்காணலில் கூறி இருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From Around the web