திரைக்கதை மன்னன் என்றால் சும்மாவா? பாக்கியராஜ் பற்றி தயாரிப்பாளர் சொன்ன அல்டிமேட் தகவல்!

 
bhagyaraj

திரைக்கதை மன்னன் என்று கொண்டாடப்பட்ட பாக்கியராஜ் இன்று நம்மிடையே இல்லை. தமிழ்த்திரை உலகமும் சரி. இந்தியத் திரையுலகமும் சரி. பல திரைக்கதை ஆசிரியர்களை சந்தித்து இருக்கின்றனர். அதை எல்லாம் தாண்டி அப்படி அவரைப் பாராட்டினார்கள் என்றால் அதற்குப் பின்னால பாக்கியராஜின் கடும் உழைப்பு இருந்து இருக்கிறது. அதை நேரடியாகவே பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்கிறார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன். அவர் மேலும் பாக்கியராஜ் குறித்து இப்படி சொல்கிறார். பாரதிராஜாவின் ஒரு கைதியின் டைரி படத்துக்கு கதை, வசனம் எழுதியது பாக்கியராஜ் தான்.  

அந்தப் படத்துக்கான டிஸ்கஷன் சென்னையில் நடைபெற்ற போது, பாரதிராஜா, நான் எல்லாம் மும்பையில் இந்திப் படப்பிடிப்பில் இருந்தோம். தொடர்ந்து அங்கு படப்பிடிப்பு நடந்ததால என்னால தான் போக முடியல. நீ அங்கு போனால் நல்லா இருக்கும் என்று சொல்லி பாக்கியராஜ் உடனான டிஸ்கஷனுக்கு என்னை அனுப்பி வைத்தார் பாரதிராஜா. அப்போது ஒரு கைதியின் டைரி படத்தைப் பற்றிப் பல காட்சிகளைப் பற்றி தினமும் பேசினார் பாக்கியராஜ். எங்களைப் பொருத்தவரைக்கும் சீன்ல அவர் சொன்னதை விட, கேட்டு சொல்ற நாள்கள் தான் அதிகம். ஒரு சீன் சொன்னாருன்னா அவ்ளோ அற்புதமா இருக்கும்.

பிரமாதமா இருக்குன்னு சொல்லிட்டு நாங்க கலைவோம். நேற்று நீங்க சொன்ன சீன் சூப்பரா இருந்தது. ஏன் இப்போ வேணாம்கறீங்கன்னு அவரைக் கேட்ட போது, இப்போ புதுசா ஒரு சீன் சொல்றேன். இதைக் கேட்டு விட்டு எது பெஸ்ட்னு சொல்லுங்கன்னு சொன்னார். அவர் சீனை சொன்ன உடனே நேற்று சொன்ன சீனை விட, 10 மடங்கு பெட்டரா இந்த புது சீன் இருந்தது. பெரும்பாலான கதாசிரியர்கள் சரியான காட்சி அமைத்து அதைப் பற்றி சிந்திப்பதை நிறுத்தி விடுவார்கள். ஆனால் பாக்கியராஜைப் பொருத்தவரைக்கும் அதைப் பற்றிய சீன் அமைந்துவிட்டாலும், தொடர்ந்து அதைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருப்பார்.

சினிமா சினிமா சினிமா என இதுதான் அவரது சிந்தனையாக இருந்தது. அதனால தான் புதுப்புது காட்சிகளைப் படைக்க முடிந்தது. எல்லா காட்சிகளையும் வித்தியாசமாகத் தர முடிந்தது. அப்படிப்பட்ட படைப்புகளாக அவரது படைப்பு இருந்த காரணத்தினால தான், இன்றைக்கும் திரைக்கதை மன்னன் என்று மொத்த இந்தியத் திரை உலகமும் அவரைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. தமிழ் சினிமா உலகின் மிகப்பெரிய படைப்பாளிக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்றும் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.     ? பாக்கியராஜ் பற்றி தயாரிப்பாளர் சொன்ன அல்டிமேட் தகவல்! 

Tags

From Around the web