கணவர் கேட்காமலேயே 15 லட்சம் கொடுத்த எம்ஜிஆர்... தேங்காய் சீனிவாசனின் மனைவி பளிச் தகவல்!
எவ்வளவு போராட்டம் வாழ்வில் வந்தாலும் யாரிடமும் எந்த உதவியும் கேட்கமாட்டார். இது எம்ஜிஆருக்கும் தெரியும். அவரே கேட்டு தான் உதவி செய்தார்
எம்ஜிஆரின் ரசிகர் மட்டுமல்ல. அபிமானி. முரட்டுப் பக்தர். எம்ஜிஆர் மேல உயிரையே வச்சிருந்தார். அதனால் அவரை ரொம்ப பிடிக்கும். எவ்வளவு போராட்டம் வாழ்வில் வந்தாலும் யாரிடமும் எந்த உதவியும் கேட்கமாட்டார். இது எம்ஜிஆருக்கும் தெரியும். அவரே கேட்டு தான் உதவி செய்தார் என்கிறார் பிரபல நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசனின் மனைவி லட்சுமி. இவர் மேலும் என்னென்ன சொல்கிறார்னு பாருங்க.
சொந்தப் படம் தயாரிக்கும்போது தேங்காய் சீனிவாசனை ஏன் இவ்ளோ ரிஸ்க் எடுக்குறேன்னு எம்ஜிஆர் அட்வைஸ் பண்ணினாராம். ஆனாலும் தேங்காய் சீனிவாசன் படம் தயாரித்து பெருத்த நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளார். ஒரு முறை அவர் மஞ்சள்காமாலை நோயால் பாதிப்புக்குள்ளாகி உடல் நலம் குன்றியும் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார். அந்த சமயத்தில் தேங்காய் சீனிவாசன் நண்பர் ஒருவருக்காக எம்ஜிஆரைப் பார்க்க சென்றபோது, எம்ஜிஆர் அவரைப் பார்த்ததும் என்ன இப்படி இருக்கே? இப்படி உடல் நிலை சரியில்லாம இருந்துக்கிட்டு ஏன் இங்கே வந்தேன்னு கேட்டுள்ளார்.
அப்புறம் என்ன உடலுக்குன்னு அக்கறையுடன் விசாரிக்க அவரோ தான் படம் தயாரித்து 10 லட்சம் வரை நஷ்டம் ஆனதையும் எடுத்துச் சொல்லி இருக்கிறார். அதன்பிறகு அவரைக் கவனித்த டாக்டர் இன்னும் அதிகமாகக் கவனித்து சிகிச்சை அளித்தாராம். அதே போல் எம்ஜிஆரும் 15 லட்சம் வரை தேங்காய் சீனிவாசனுக்கு பண உதவி செய்தாராம்.
