58 ஆண்டுகள் நிறைவு செய்த தில்லானா மோகனாம்பாள்

தமிழ் திரையுலக வரலாற்றில் என்றும் அழியாத காவியமாகத் திகழும் தில்லானா மோகனாம்பாள்  திரைப்படம் வெளியாகி 58 ஆண்டுகள் நிறை
 
thillana mohanambal

தமிழ் திரையுலக வரலாற்றில் என்றும் அழியாத காவியமாகத் திகழும் 'தில்லானா மோகனாம்பாள்' திரைப்படம் வெளியாகி 58 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 1968-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி வெளியான இத்திரைப்படம், தமிழ்நாட்டின் பாரம்பரிய நாதஸ்வர இசையையும் பரதநாட்டியக் கலையையும் திரையில் அழகாகப் பதிவுசெய்து, இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

thillana mohanambal

கொத்தமங்கலம் சுப்பு கலைமணி  என்ற புனைப்பெயரில் ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதிய புகழ்பெற்ற  தில்லானா மோகனாம்பாள்  நாவலை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டது. இதனை ஏ.பி. நாகராஜன் திரைக்கதை அமைத்து, தயாரித்து இயக்கியிருந்தார்.நாதஸ்வரக் கலைஞர் சிக்கல் சண்முகசுந்தரத்திற்கும் , பரதநாட்டியக் கலைஞர் மோகனாம்பாளுக்கும்  இடையே ஏற்படும் காதல், மோதல் என கலந்து கட்டி கொடுத்திருப்பர் இயக்குனர். படத்திற்காக உண்மையான நாதஸ்வர கலைஞர்ராகவே மாறியிருப்பர் சிவாஜி கணேசன். அவரது  உடலமைப்பும் விரலசைவுகளும் அவ்வளவு தத்ருபமாக இருக்கும்., அதே வேலை பத்மினியின் நவரச பாவனை நடனமும் கதாபாத்திரமும் படத்திற்கு மிகப்பெரிய பங்கினை கொடுத்தது.

thillana mohanambal

ஜில் ஜில் ரமாமணி  என்ற கதாபாத்திரத்தில் மனோரமா காட்டிய சுட்டித்தனமான நடிப்பும் பேச்சு வழக்கும்  அனைவராலும் ரசிக்கப்பட்டது, அந்த வேடம் சிறந்த துணை நடிகைக்கான தமிழக அரசின் விருதையும் மனோரமாவுக்கு பெற்றுத் தந்தது. தவில் கலைஞராக டி.எஸ். பாலையாவின் இயல்பான நடிப்பும்,  நாகேஷின் நகைச்சுவையும் இப்படத்திற்குப் பலம் சேர்த்தன.

படத்தின் வெற்றிக்கு மற்றொரு காரணம் கே.வி.மகாதேவன் இசையையும் சொல்லலாம். மறைந்திருந்து பார்க்கும்,  நலந்தனா போன்ற பாடல்கள் காலம் கடந்தும் இன்றளவும் பேசப்படுவதே இதற்கு ஒரு சான்று. 

இத்திரைப்படம் கடந்த  1968ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது.  இப்படம் வெளியாகி கிட்டதட்ட 58 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 

Tags

From Around the web