மறைந்து 39 ஆண்டுகள்... ஆனாலும் மக்கள் மனதில் எம்ஜிஆர் நிற்க இதுதான் காரணமா?
மக்கள் திலகம் எம்ஜிஆர் மறைந்து 39 ஆண்டுகள் ஆகின்றன. அப்படி இருந்தும் இன்றைக்கும் தமிழ்நாட்டிலே உள்ள மக்கள் அவரை இதயத்தில் வைத்து பூஜிக்கிறார்கள் என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கு. அதுல ஒன்றை மட்டும் இப்போது பார்ப்போம்.
எம்ஜிஆர் வீட்டுக்கு ஆயிரக்கணக்கில் கடிதங்கள் வரும். ஒருநாள் வெளியே கிளம்புகிறபோது, அந்தக் கடிதக் குவியலில் இருந்து ஒரு கடிதத்தை எடுக்கிறார். அந்தக் கவருக்குள் ஒரு திருமணப்பத்திரிகை இருந்தது. பொதுவாக திருமணப்பத்திரிகைன்னா என்னோட மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் நடக்குது. நீங்க உதவி பண்ணனும்னு வரும். இல்லன்னா, நீங்க இந்த திருமணத்துக்கு வந்து சிறப்பிக்கணும்னு வரும். ஆனா அப்படி எழுதப்படல.
அந்த திருமணப்பத்திரிகை மட்டும் அதுல இருந்தது. அதைக் கையில எடுத்த எம்ஜிஆர், தன்னோட உதவியாளர்கிட்ட இந்தக் கல்யாணம் எங்கே நடக்குது? இது யாருடைய கல்யாணம் என்றெல்லாம் விசாரித்தார். திருமணம் நடக்கும் வீட்டுக்கு முன்னால திருமணத்தன்று பல போலீஸ் அதிகாரிகள் வந்து நிக்கிறாங்க. அந்த மணமகனோட அப்பாவுக்கும், அம்மாவுக்கும் என்ன நடக்குதுன்னு புரியல. அடுத்த 10வது நிமிஷம் அங்கு வந்து நிற்கிறார் எம்ஜிஆர்.
அவரைப் பார்த்த உடனே மணமகனோட அப்பா அப்படியே கண்கலங்கி விட்டார். கல்யாணப்பத்திரிகை மட்டும்தான் அனுப்பிச்சேன். எப்படி நீங்க வந்தீங்கன்னு எல்லாம் அவர் தட்டுத்தடுமாறிக் கேட்டபோது, நீ என்ன நம்பிக்கையில இந்த கல்யாணப் பத்திரிகையை அனுப்பிச்சே? இது கண்டிப்பாக என்னை வந்து சேரும்.
நான் வருவேங்கற நம்பிக்கையில தான அனுப்பினே... அந்த நம்பிக்கை வீணாகலாமா..? அதுக்காகத்தான் நான் வந்தேன் என்றார் எம்ஜிஆர். இதெல்லாம் இந்தக் காலகட்டத்துல நினைச்சிப் பார்க்கக்கூடிய விஷயமான்னு எண்ணிப் பாருங்க. இதன் காரணமாகத்தான் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் எம்ஜிஆர் எல்லோரது மனதிலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
