குடிபோதையில் வரத் தயங்கிய வாலி... ஏவிஎம் அவசர அழைப்பு... சூப்பர்ஹிட் நாகேஷ் பாடல் ரெடி!

 
vaali, nagesh

ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பிலும், கிருஷ்ணனுடைய இயக்கத்திலும் நாகேஷ் கதாநாயகனாக நடித்த படம் சர்வர் சுந்தரம். இந்தப் படத்துல மக்கள் மனதில் இடம்பெற்ற பாடல்களில் மக்கள் மனதிலே இன்றுவரை நிலை பெற்று இருக்கின்ற ஒரு பாடல்னா அது அவளுக்கென்ன அழகிய முகம் என்று தொடங்கும் பாடல் தான். அந்தப் பாடல் காட்சியில் அட்டகாசமாக நடனம் ஆடி நடித்து இருப்பார் நாகேஷ். அந்தப் பாடல் எப்படிப்பட்ட சூழலில் எழுதப்பட்டது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

சர்வர் சுந்தரம் உருவான காலகட்டத்தில் கவிஞர் வாலிக்குத் திருமணம் ஆகவில்லை. தனிக்கட்டையாகத்தான் இருந்தார். அன்றைக்கு வேற எதுவும் வேலை இல்லை என்றதால் 6 மணிக்கே மதுபாட்டிலை திறந்தவர் ஏறக்குறைய கால் பாட்டிலை குடித்து முடித்து விட்ட நிலையில்தான் அவருடைய வீட்டு வாசலிலே ஒரு கார் வந்து நின்றது. அந்தக் காரில் இருந்து விஸ்வநாதனின் நிர்வாகியான தாடி சுந்தரம் அவசரம் அவசரமாக வந்து இறங்கினார். அண்ணேன்... உடனடியாகக் கிளம்புங்க.

உங்களுக்காக எம்எஸ்.விஸ்வநாதன் காத்துக்கிட்டு இருக்காரு. இன்னைக்கே பாட்டு கம்போசிங்கை முடிச்சி நாளைக்கு காலையிலேயே பாட்டை ரெக்கார்ட் பண்ணனும்னு சொன்னார். அப்போது எந்தக் கம்பெனிக்கு என்று வாலி கேட்டார். ஏவிஎம் நிறுவனம்னு பதில் வந்தது. அப்படி சொன்ன உடனே கவிஞர் வாலிக்கு சப்த நாடியும் அடங்கி விட்டது என்றுதான் சொல்லணும். இப்ப நான் இருக்குற சூழ்நிலையில பாட்டு எழுதுறதுக்கு அங்கே வந்தா, பாட்டு எழுதுற கேரியரே முடிஞ்சிரும். இதுக்கு அப்புறம் எனக்கு யாரும் பாட்டு எழுதுறதுக்கு வாய்ப்பே தர மாட்டாங்க.

அதனால என்னை மன்னிச்சிரு. என்னால வர முடியாது என்றார் கவிஞர் வாலி. அவர் அப்படி பேசிக்கிட்டு இருக்கும்போதே விஸ்வநாதனுடைய இன்னொரு உதவியாளர் சதன் அடுத்த கார்ல அங்கே வந்து இறங்கினார். என்ன அண்ணேன், எல்லாரும் காத்துக்கிட்டு இருக்காங்க. நீங்க இங்கே பேசிக்கிட்டு இருக்கீங்க. உடனே சட்டையை மாட்டிட்டு கிளம்புங்க என்றார் சதன். இனி தப்ப முடியாது. போய்த்தான் ஆகணும்கற சூழலில் அவசரம் அவசரமாக குளித்து விட்டு சட்டையை எல்லாம் மாட்டிக்கிட்டு வீட்டுல இருந்த சென்டை எல்லாம் மேல தெளிச்சிக்கிட்டு ஏவிஎம் நிறுவனத்தை நோக்கிச் சென்றார் வாலி.

கம்போசிங் நடைபெற்ற அறை மிகவும் சின்ன அறை. அதனால அந்த அறை முழுவதும் மதுவின் வாசம் வீச ஆரம்பித்தது. அண்ணேன் ரொம்ப வாசனை வருது. அதனால இந்த வெத்தலைப்பாக்கைப் போட்டுக்கோங்கன்னு சொல்லி வெத்தலைப் பாக்கு பெட்டியை அவர் பக்கம் தள்ளினார் எம்எஸ்.விஸ்வநாதன். அடுத்து எம்எஸ்.விஸ்வநாதன் டியூனை வாசிக்க அரை மணி நேரத்தில் அந்தப் பாடலை எழுதி முடித்தார் கவிஞர் வாலி. அப்படி எழுதப்பட்ட அந்தப் பாடல் தான் அவளுக்கென்ன அழகிய முகம் என்ற அந்தப் பாடல். 

Tags

From Around the web