வாலியால் கமலுக்கு இணையாக அவருக்கு நடிக்க கிடைத்த வாய்ப்பு... அட பாலசந்தர் படமா?

 
vaali, KB, kamal

கமல்ஹாசன், சுமித்ரா, ஷோபா ஆகியோர் நடித்த நிழல் நிஜமாகிறது படத்துல கமலுக்கு இணையான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் அனுமந்து என்ற ஒரு நடிகர். இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கத்தில் அப்படி ஒரு கதாபாத்திரத்தில் அனுமந்து நடித்தார் என்றால் அதுக்கு முக்கியமான காரணம் கவிஞர் வாலி. அந்தக் காலத்தில் கவிஞர் வாலி சம்பூர்ண ராமாயணம் என்ற பெயரில் ஒரு நாடகம் நடித்துக் கொண்டு இருந்தார்.

அந்த நாடகத்தில் அனுமந்து முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு இருந்தார். அந்த நாடகத்தைப் பார்க்க வந்த பாலசந்தர் அந்த நாடகத்தின் கதை அமைப்பில் ஈர்க்கப்பட்டு அந்த நாடகக் கதையைத் திரைப்படமாக ஆக்குகின்ற உரிமையை வாலியிடம் இருந்து வாங்கினார். ஒரு சில காரணங்களால அந்தக் கதையை பாலசந்தரால படமாக்க முடியலன்னாலும் அந்த நாடகத்தில் நடித்த இரு முக்கியமான கலைஞர்களுக்கு தன்னோட படத்தில் நடிக்க வாய்ப்பளித்தார்.

நிழல் நிஜமாகிறது படத்தில் அனுமந்துக்கு வாய்ப்பு கொடுத்தது போல ராஜப்பா என்ற கலைஞருக்கு தன்னோட நினைத்தாலே இனிக்கும் படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தை வழங்கி இருந்தார் பாலசந்தர். என்னுடைய நாடகம் படமாகவில்லையே என்ற வருத்தம் ஒரு பக்கம் இருந்தாலும் அந்த நாடகத்தில் நடித்த இரு கலைஞர்கள் அவருடைய படத்தில் நடிக்கின்ற வாய்ப்பினைப் பெற்றார்களே அது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்தது என்று ஒரு பத்திரிகைப் பேட்டியிலே பதிவு செய்துள்ளார் கவிஞர் வாலி.

Tags

From Around the web