எம்எஸ்வி.யிடம் வாலிக்கு வாய்ப்பு கொடுக்காதேன்னு சொன்ன கண்ணதாசன்... அதுக்கு அப்புறம் நடந்த தரமான சம்பவம்!

 

கவிஞர் கண்ணதாசன் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தவர் கவிஞர் வாலி. அதே மாதிரி கவிஞர் வாலி மேல மிகுந்த மரியாதை வைத்திருந்தவர் கவிஞர் கண்ணதாசன்.

அப்படி இருந்த போதும் இருவருமே ஒருவரை ஒருவர் தாக்கி மேடையில் விமர்சித்துக் கொண்டிருந்தார்கள் என்பதுதான் உண்மை. எம்ஜிஆரை சார்ந்து கவிஞர் வாலியும், எம்ஜிஆருக்கு எதிராக கவிஞர் கண்ணதாசனும் செயல்பட்டுக் கொண்டிருந்த அந்தக் காலகட்டத்துல எம்ஜிஆர் மன்ற மேடைகளில் கவிஞர் கண்ணதாசனுடைய பாடல்களை சரமாரியாக விமர்சிப்பார் கவிஞர் வாலி.

அதே மாதிரி காங்கிரஸ் மேடைகள்ல வாலியின் பாடல்களை விமர்சிப்பார் கண்ணதாசன். ஒருமுறை எம்எஸ்.விஸ்வநாதன்கிட்ட பாடல் ஆசிரியர்கள்ல நீ யாரை வேணா ஆதரி. ஆனா வாலியை மட்டும் ஆதரிச்சு தொடர்ந்து அவருக்கு சந்தர்ப்பம் கொடுக்காதே என்றாராம் கண்ணதாசன். அவர் இப்படி சொன்ன உடனே ஏன்னே இப்படி சொல்றேங்க என்று கேட்டராம் எம்எஸ்வி. மத்தவங்களை நீ எவ்வளவுதான் ஆதரிச்சாலும் எவனும் எனக்கு போட்டியா வரமாட்டான்.

ஆனா இந்தப் பையன் அப்படி இல்லை. விஷயம் உள்ளவன் என்று சொல்லிவிட்டு குழந்தையைப் போல வெகுளித்தனமாக சிரித்திருக்கிறார் கவிஞர் கண்ணதாசன். இந்த சம்பவத்தைப் பற்றி வாலியிடம் எம்எஸ்வி. சொன்னபோது, அவர் இப்படி சொன்னதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஏன்னா பாட்டு எழுதுறது பணம் சம்பந்தப்பட்ட விஷயம். எனக்கு இருக்குறது ஒரே பொண்ணு. அவருக்கு இருக்குறது 14 குழந்தை. பொருளாதார ரீதியா இன்னொரு கவிஞனால தன்னோட வருமானம் பாதிக்கப்படுறதை எப்படி அவரால தாங்கிக்க முடியும் என்று சொல்லி இருக்கிறார் கவிஞர் வாலி.

கவிஞர் கண்ணதாசனுக்கு எதிராக பாட்டுக்கடை விரிக்க வந்தவர்தான் வாலி அப்படின்னாலும் பட உலகுக்குள்ளே வந்ததுக்கு பின்னால அவங்க இரண்டு பேருக்கும் இடையிலே இனம் புரியாத ஒரு மரியாதையும், அன்பும் இருந்தது என்பதுதான் உண்மை.

From Around the web