இயக்குனர் எடிட்டரானார்... கவிஞர் இயக்குனரானார்... அதென்ன அதிசயம்... வாலி தந்த சுவாரசிய தகவல்!

 
vaali

பிரபல கவிஞர் வாலி எழுத்தாளர் மாருதிராவுடன் சேர்ந்து இயக்கிய திரைப்படம் தான் வடமாலை. அந்தப் படத்தை தர்மராஜன் தயாரித்தார். இவர் யாருன்னு பார்ப்போமா... எம்ஜிஆர் முதல்வரான பிறகு அவருடன் ஒரு திரைப்படத்தில் நடிக்கலாம் அப்படிங்கற எண்ணம் அவருக்கு இருந்தது. அப்போது அந்தப் படத்தை தயாரிப்பதாக இருந்தது தர்மராஜன்தான். கே.சங்கருடைய இயக்கத்தில்தான் அந்தப் படம் உருவாக இருந்தது. அந்தப் படத்துக்கு கதை வசனம் எழுதியவர் வாலி.

ஒரு சில காரணங்களால அந்தப் படத்தின் படப்பிடிப்பை எம்ஜிஆரால தொடர முடியல. அப்படிப்பட்ட நிலையில்தான் அவருடைய தயாரிப்பில் வடமாலை என்ற திரைப்படத்தை இயக்கினார் வாலி. இது ஒரு சில விமர்சகருடைய பாராட்டைப் பெற்றது. தமிழக அரசும் அந்தப் படத்தைப் பாராட்டி விருதும் வழங்கியது.

ஆனாலும் அந்தப் படம் கமர்ஷியலாக வெற்றிப்படமாக அமைந்ததா என்றால் இல்லை. அந்தப் படத்தின் வசூல் சரியாக அமையவில்லை என்பதிலும் அந்தப் படத்தினால் தர்மராஜூக்கு நட்டம் ஏற்பட்டது அப்படிங்கறதும் எனக்கு வருத்தம் தான். என்றாலும் அந்தப் படம் உருவாகும் போது நடந்த சம்பவங்கள் என் மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது என்று ஒரு பத்திரிகைப் பேட்டியில் பதிவு செய்துள்ளார் கவிஞர் வாலி.

அந்தப் படத்தில் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்த விஷயங்களில் குறிப்பிட்டு சொல்லணும்னா அந்தப் படத்தின் எடிட்டிங். அந்தப் பொறுப்பை எடுத்து இருந்தவர் ஒரு மாபெரும் இயக்குனர். எம்ஜிஆர், சிவாஜி நடித்த பல வெற்றிப்படங்களை இயக்கியவர். சிங்களத்தில் கூட ஒரு படத்தை இயக்கி இருக்கிறார்.

அப்படிப்பட்ட மாபெரும் இயக்குனரான கே.சங்கர் உன் படத்துக்கு நான்தான் எடிட் பண்ணுவேன்னு சொல்லி அந்தப் படத்தை எடிட் பண்ணுவதற்கு தானாக முன்வந்தார். ஒரு பாடலாசிரியராக பல படங்கள்ல நான் பணியாற்றி இருக்கிறேன். என்றாலும் நான் டைரக்டராகவும் அவர் எடிட்டராகவும் பணியாற்றிய அந்த அனுபவத்தை என்னால் என்றும் மறக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார் வாலி. 

Tags

From Around the web