ஏவிஎம் ஸ்டூடியோவில் நுழைய வடிவேலு செய்த மேஜிக்... அப்பவே இவ்ளோ திறமையா?
சினிமாவிலே சேர வேண்டும் என்ற கனவோடு ஏவிஎம் ஸ்டூடியோவுக்குள் வந்து அது முடியாமல் தோற்றுப் போனவர்கள் பல பேர் இருக்காங்க. அதுல இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் அடக்கம். நகைச்சுவை நடிகர் வடிவேலு ஏவிஎம் ஸ்டூடியோவில் காலடி எடுத்து வைத்த போதும் அதே விஷயம்தான் அவருக்கும் நடந்தது. ஆனால் மற்ற கலைஞர்களுக்கும், வடிவேலுவுக்கும் வித்தியாசம் என்னன்னா, மற்ற கலைஞர்கள் எல்லோரும் ஏவிஎம் ஸ்டூடியோ வாசல்ல நின்னு இதே ஸ்டூடியோவுல நான் ஒரு படம் எடுக்கேனா, இல்லையான்னு பாரு அப்படின்னு சபதம் போட்டுட்டு அந்த ஸ்டூடியோவை விட்டு வெளியே போய்விடுவார்கள்.
ஆனால் வடிவேலு அப்படி எல்லாம் அந்த ஸ்டூடியோவை விட்டுப் போகல. அங்கிருந்த வாட்ச்மேனைப் பார்த்து சிரித்தார். அவரு இவரைப் பார்த்து சிரித்தார். நீங்க எந்த ஊருன்னு வடிவேலு கேட்க, நான் பெரியகுளம் என்றார் அவர். இது போதாதா வடிவேலுவுக்கு. நான் மதுரை அண்ணேன். எப்படியாவது இந்த ஸ்டூடியோவுக்குள்ள நுழைஞ்சி நடிகனாயிடணும்னு தான் ஆசை என்றார் வடிவேலு. உடனே அந்த வாட்ச்மேன், எங்க நடிச்சிக்காட்டுன்னு கேட்க, வாட்ச்மேன் எந்த கூண்டுக்குள்ள இருந்தாரோ, அவரைத் தூக்கி வெளியே தூக்கி வீசிட்டு, அந்த கூண்டுக்குள்ள இருந்து கையைக் காலை ஆட்டி பிரமாதமா நடிச்சிக் காட்டினார் வடிவேலு.
இவர் நடிச்சிக் காட்டுனதைப் பார்த்த உடனே, அந்த வாட்ச்மேனுக்கு சிரிப்பு தாங்கல. நல்லா தான்யா நடிக்கிறே என்று வடிவேலுவைப் பாராட்டியவர் ஏவிஎம் ஸ்டூடியோவின் அந்த கதவுகளை வடிவேலுவுக்காக விசாலமாகத் திறந்து விட்டார். நான் நடிகனா ஆனதுக்கு அப்புறம் படப்பிடிப்புல கலந்து கொள்வதற்காக ஏவிஎம் ஸ்டூடியோவுக்குப் பலமுறை போயிருக்கேன். அப்படின்னாலும், முதல் நாள் அந்த ஏவிஎம் ஸ்டூடியோவில் காலடி எடுத்து வைத்த அந்த நாள் இருக்கே. அதை என்றும் மறக்க முடியாது என்று ஒரு பத்திரிகை பேட்டியில் வைகைப் புயல் வடிவேலு தெரிவித்துள்ளார்.
