படப்பிடிப்பில் சிவாஜியைத் தொட்டுப் பார்த்த வடிவேலு... அப்புறம் சொன்னதுதான் ஹைலைட்!

 
sivaji, vadivelu

நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிகர் திலகத்தோடு இணைந்து நடித்த முதல் படம் தேவர்மகன். அந்தப் படத்தின் படப்பிடிப்பின் போதுதான் முதன்முதலாக சிவாஜியை சந்தித்தார் வடிவேலு. அப்படி தான் சந்தித்த அனுபவம் பற்றி ஒரு பத்திரிகையிலே மிக அழகாகப் பதிவு செய்து இருக்கிறார். காலையில 7 மணிக்குப் படப்பிடிப்பு என்றார்கள். சிவாஜியை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தில நான் 7 மணிக்கு போனேன்.

சிவாஜி கம்பீரமா கால் மேல் கால் போட்டு ஒரு நாற்காலியில அமர்ந்து இருந்தார். அவரைத் தொட்டுப் பார்க்க வேண்டும் என்ற ஆசை. அவர் தொட்டுப் பார்த்த போது சிவாஜி அவரைப் பார்த்து ஏம்பா இந்த ஊரான்னு கேட்டார். இல்லங்க. எனக்கு மதுரை. உங்களைத் தொட்டுப்பார்க்க வேண்டும் என்பது ரொம்பநாள் ஆசை. அதனாலதான் உங்களைத் தொட்டுப் பார்த்துட்டேன். நல்லா நடிக்கணும். நல்ல ஆளுன்னு பேரு வாங்கணும் என்றார்.

நான் சத்தித்த இடத்தில அவரைத் தொட்டுப்பார்க்க வேண்டும் என்று ஆசை. அதனால பின்பக்கமா போய் அவரது கையைத் தொட்டு விட்டேன். தப்பா நினைச்சுக்காதீங்க என்றார் வடிவேலு. அப்படியா என்று என்னைத் தட்டிக் கொடுத்த சிவாஜி, நல்லா நடிக்கணும். நல்ல ஆள்னு பேரு வாங்கணும் என்று எனக்கு அறிவுரையும் சொன்னார். அன்று அவர் சொன்ன அறிவுரை அப்படியே என் மனதிலே பதிந்துவிட்டது. நான் கையைத் தொட்ட உடனே அவர் திருப்பிப் பார்த்தார். என்றார் வடிவேலு. அன்று அவர் சொன்ன அந்த அறிவுரை என் மனதிலே ஆழப்பதிந்தது. 

Tags

From Around the web