என் இனிய தமிழ் மக்களே!.. பாரதிராஜாவுக்கு எழுதி கொடுத்தது யார் தெரியுமா?...
16 வயதினிலே என்கிற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவை புரட்டிப் போட்டவர் இயக்குனர் பாரதிராஜா. நாடகத்தனமான திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருந்த காலத்தில் இயல்பான சினிமாவை எடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் பாரதிராஜா. கார்த்திக், ராதா, ராதிகா, ராஜா, ரேவதி, சுகன்யா, பாண்டியன், நெப்போலியன் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகளை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்த வைத்தவர் இவர்.
கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை அச்சு பிசராமல் அப்படியே திரைப்படங்களில் பிரதிபலித்தவர். மூன்று முறை தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார். இவரின் படத்தின் டைட்டில் கார்டில் ‘என் இனிய தமிழ் மக்களே’ என கரகரப்பான குரலில் பாரதிராஜா பேசும் போது தியேட்டரில் கைத்தட்டல் விசில் பறக்கும்..
திரைப்படங்களின் டைட்டில் கார்டில் மட்டுமல்ல.. எந்த சினிமா விழாக்களில் பேசினாலும் பேச்சை தூங்குவதற்கு ‘முன் என் இனிய தமிழ் மக்களே’ என்றுதான் பேச்சை துவங்குவார் பாரதிராஜா. சமீபத்தில் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு அவர் மரணமடைந்தார். அவரின் ஆசைப்படி தேனியில் உள்ள அவரின் பண்ணை வீட்டில் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு வார இதழ் ஒன்றுக்கு பேட்டிகொடுத்த கவிஞர் வைரமுத்து ஒரு முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார். ‘கேசட்டில் பேச வேண்டும்.. நாலு வரி எழுதிக் கொடுங்கள்’ என்று என்னிடம் ஒரு நாள் பாரதிராஜா கேட்டார். ‘என் இனிய தமிழ் மக்களே .. உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன்’ என்று எழுதிக் கொடுத்தேன்.
கலைஞர் ‘உடன்பிறப்பே’ என சொன்னது போல, ‘ரத்தத்தின் ரத்தமே’ என்று எம்ஜிஆர் அழைத்தது சரித்திரத்தில் நின்றது போல, ஒரு கலைஞன் ‘என் இனிய தமிழ் மக்களே’ என்றதும் நிலை பெற்றது. மொழி கடந்து தன் குரலை அடையாளப்படுத்திய பெருமை பாரதிராஜாவுக்கு உண்டு’ என அவர் சொல்லியிருக்கிறார்.
