'போர் தொழில்'-க்கு டப்பிங் பேசிவிட்டு சரத்பாபு சார் சொன்ன விஷயம்... நெகிழ்ந்து போன இயக்குநர் விக்னேஷ் ராஜா!

 
Por thozhil sarath babu vignesh raja

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளில் வெளியான சிறந்த சீரியல் கில்லர் த்ரில்லர் படங்களின் லிஸ்ட்டை எடுத்தால், அதில் முதல் இடம் 'உலக நாயகன்' கமல்ஹாசன் நடித்து 2006-ஆம் ஆண்டு வெளியான 'வேட்டையாடு விளையாடு' படத்துக்கு தான்.

விஷ்ணு விஷால் நடித்து 2018-ஆம் ஆண்டு வெளியான 'ராட்சசன்' படத்துக்கு தான் இரண்டாவது இடம். மூன்றாவது இடத்தை பிடித்திருப்பது 2023-ஆம் ஆண்டு வெளியான 'போர் தொழில்' படம்.

புதுமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத்குமார், அசோக் செல்வன் நடித்திருந்தனர். இதில் முக்கியமான நெகட்டிவ் கேரக்டரில் சரத்பாபு நடித்திருந்தார். அவரை யாரும் அப்படி ஒரு ரோலில் எதிர்பார்க்கவில்லை.

அந்த படத்தின் வெற்றிக்கு பல விஷயங்கள் காரணமாக இருந்தாலும், சரத்பாபு நடித்ததும் ஒரு ப்ளஸ்ஸாக அமைந்து விட்டது. இதுதான் சரத்பாபுவின் மறைவுக்கு முன்பு, அவர் நடித்த கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், இயக்குநர் விக்னேஷ் ராஜா கொடுத்த பேட்டியில் சரத்பாபு குறித்து பேசுகையில் "முதல்ல இந்த படத்துல நடிக்க வைக்க சரத்பாபு சாரோட மேனேஜர் மூலமா நான் ரீச் பண்ணபோது, அவங்க பெருசா எந்த interest-ம் காட்டல.

எனக்கு தெரிஞ்சு அவர் மைண்ட் அளவுல retired ஆயிட்டாரா, இல்ல அவருக்கு உடம்பு சரியில்லாம இருந்ததை யாருக்கும் சொல்லாம இருந்தாரா என்னன்னு தெரியல. அந்த கதையை அவரை கேக்க வைக்க நான் நிறைய போன் கால்ஸ் பண்ணுவேன், ப்ளீஸ் ஒரு தடவை கேளுங்க சாருன்னு மெசேஜ் பண்ணுவேன்.

 

Por thozhil shooting spot stills

 

அப்புறம் ஃபைனலா அவரோட வீட்டுக்கு என்ன கதை சொல்ல வர சொன்னார். நம்ம ஒரு complicated-ஆன screenplay பண்ணியிருக்கோம். அது ஃபர்ஸ்ட் அவருக்கு புரியுமான்னு நினைச்சேன். ஆனா, அவர் கதை சொல்லி முடிச்ச பிறகு நிறைய கேள்விகள் கேட்டார். நான் மிரண்டுட்டேன். நான் எல்லாத்துக்கும் பதில் சொன்னதும் ஓகே சொல்லிட்டார்.

அப்புறம், இப்போ நீங்க இருக்குற லுக்லயே நடிக்கணும் சாருன்னு சொன்னேன், அதுக்கு மட்டும் கொஞ்சம் யோசிச்சாரு. ஒரு ரெண்டு நாள்ல போன் பண்ணி சரி இதே லுக்ல பண்றேன்னு சொல்லிட்டார். அவரோட சீன்ஸ் எல்லாமே நைட் தான் ஷூட் பண்ணோம். ஒரு 14 நாட்கள் வந்து நடிச்சு கொடுத்தார்.

ஆனா, அவருக்கு உடம்பு முடியலன்னு எங்க யாருக்குமே தெரியாது. அப்புறம் டப்பிங் டைம்ல ஒரு 3 நாட்கள் வந்தார். அப்பவும் எங்களுக்கு தெரியாது. டப்பிங் முடிச்சுட்டு போன பிறகு ஒரு 10 நிமிஷத்துல எனக்கு கால் பண்ணி, விக்னேஷ் எனக்கு என்னமோ ஒரு நல்ல ஃபீல் இருக்கு. இந்த படத்தை மற்ற languages-லயும் டப் பண்ண சொல்லுங்க. அது தான் அவர் என்கிட்ட கடைசியா பேசுனது. அப்புறம் படம் முடிச்சு ட்ரெய்லர் ரிலீஸ் பண்ற டைம்ல தான், அவர் இறந்துட்டதா செய்தி வந்துச்சு.

நான் அவர்கிட்ட ஃபர்ஸ்ட்டே சொன்னேன், சார் உங்களோட பெயரை நான் படத்தோட டைட்டில் கார்டில் போடாம, ட்ரெய்லர்லயும் உங்க சீன்ஸ் எதையும் reveal பண்ணாம, படம் முடிஞ்சு டைரக்டர் கார்டு போட்டுட்டு உங்க பெயரை போடலாம்ன்னு இருக்கேன் சாருன்னு சொன்னேன். அதுக்கு அவர் அது தான் கரெக்ட் விக்னேஷ்ன்னு சொன்னார். அந்த வயசுல அவர் அவ்ளோ sportive-ஆ இருந்தது தான் எனக்கு ஆச்சர்யம்" என்று கூறியுள்ளார்.

From Around the web