தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் இடையே வந்த Ego Clash-னால தான் 'சூரி' படம் ஓடல... உண்மையை போட்டுடைத்த நடிகர் விக்னேஷ்!
பெரிய ஹீரோக்கள், மெகா பட்ஜெட் படங்களுக்கு பெரியளவில் புரொமோஷன் தேவைப்படாது. ஆனால், சின்ன பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்கு புரொமோஷன் மிகவும் முக்கியம்.
சில நேரங்களில் நல்ல படங்கள் வெளியாகியும், சரியான புரொமோஷன் இல்லாமல் அப்படி ஒரு படம் வந்ததே ரசிகர்களுக்கு தெரியாமல் போகும் சூழல் இப்போதும் இருக்கிறது. அப்படி இருக்கையில் 2003-ஆம் ஆண்டில் கேட்கவா வேண்டும்.
2003-ல் பிரபல நடிகர் விக்னேஷ் ஹீரோவாக நடித்து ரிலீஸ் ஆன படம் 'சூரி'. இதில் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். 'ஶ்ரீ காமாட்சி ஸ்டுடியோஸ்' நிறுவனம் சார்பில் பி.விஜயகுமார் தயாரித்த இந்த படத்தை இயக்குநர் ஸெல்வன் இயக்கியிருந்தார்.
சமீபத்தில், நடிகர் விக்னேஷ் கொடுத்த பேட்டியில் இப்படம் குறித்து பேசுகையில் "நான் நடிச்ச 'சூரி' படம் ஓரளவுக்கு தான் ரசிகர்கள் கிட்ட ரீச் ஆச்சு. அந்த டைம்ல படங்களுக்கான புரொமோஷன் வந்து தினத்தந்தி, தினமலர் போன்ற பத்திரிக்கைகள்ல மட்டும் தான் கொடுக்க முடியும்.
அந்த படத்தோட தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் இடையே ஒரு misunderstanding ஆயிருச்சு. அவர் ஒரு புதிய தயாரிப்பாளர். அவர்கிட்ட என்னால தான் உங்களுக்கு பேரு கிடைச்சிருக்குன்னு டைரக்டர் சொல்ல, அதுக்கு தயாரிப்பாளர் நான் ஆல்ரெடி பணக்காரன் பென்ஸ் காரில் போயிட்டு இருக்குறேன்னு சொல்லி ரெண்டு பேருக்கும் இடையே ego clash ஆயிருச்சு.
இதுனால என்னாச்சுன்னா 35-வது நாள் படம் தியேட்டர்ல ஓடிட்டு இருக்கும்போது, அந்த தயாரிப்பாளர் பத்திரிக்கைகள்ல கொடுத்துட்டு இருந்த விளம்பரத்தை அப்படியே ஸ்டாப் பண்ணிட்டார். ரசிகர்கள் பேப்பர்ல எந்த தியேட்டர்ல எந்த படம் ஓடுதுன்னு பார்த்தால் தானே போக முடியும். கிராமங்களில் எல்லாம் டீ கடையில் பேப்பர் பாத்துட்டு தான் தியேட்டருக்கு வருவாங்க.
தயாரிப்பாளர் டக்குன்னு இப்படி செஞ்சதும், ரெண்டு மூன்று நாட்களில் தியேட்டர்களில் ஆடியன்ஸே வரல. நாங்க எவ்வளவோ அவர்கிட்ட சொன்னோம் விளம்பரம் கொடுங்கன்னு. ஆனா, அவர் கேக்கல. யாருக்கும் ego clash வரக்கூடாது. ஒரு ego-னால நல்லா ஓடிட்டு இருந்த படம் அப்படியே ஸ்டாப் ஆயிருச்சு" என்று கூறியுள்ளார்.
