விஜய் சம்பளமே கேட்கமாட்டாரு!.. அவர பாத்து கத்துக்கணும்!.. திருப்பூர் சுப்பிரமணியன் பேட்டி..

 
vijay


தன் மகன் விஜய் சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டதால் நாளைய தீர்ப்பு என்கிற திரைப்படம் மூலம் அவரை அறிமுகம் செய்துவிட்டார் அவரின் தந்தை மற்றும் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர். அந்த படம் சரியாக போகவில்லை..

அதன்பின் இயக்கிய ரசிகன் திரைப்படம் நல்ல வசூலை பெற்றது. ஆனாலும் அதன் தொடர்ச்சியாக விஜய் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக போகவில்லை. அப்போதுதான் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக திரைப்படம் விஜய்க்கு கை கொடுத்தது.

இந்த திரைப்படம் விஜய்க்கு ஒரு மெகா ஹிட் படமாக அமைந்து விஜய் ஒரு கவனிக்கத்தக்க ஒரு நடிகராக மாறினார். அதுவரை விஜயை வைத்து படமெடுக்க  மறுத்த தயாரிப்பாளர்கள் விஜயின் கால்ஷுட்டுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது..

poove unakaga

இந்நிலையில், வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் பேட்டி ஒன்றில் ‘விஜய் சாருக்கு பூவே உனக்காக திரைப்படம் சூப்பர் ஹிட். அதாவது, அவரின் அப்பா கம்பெனி இல்லாமல் மற்ற தயாரிப்பாளர் படத்தில் நடித்து முதல் ஹிட். இப்போது ஒரு புதுமுக ஒரு நடிகர் 25 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்து அந்த படம் ஓடிவிட்டால் அடுத்த படத்திலேயே 10 கோடி கேட்கிறார்.

அதுவும் வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளரை விட்டுவிட்டு மற்ற கம்பெனிக்கு நடிக்க போய்விடுகிறார்கள். ஆனால் விஜய் அப்படி இல்லை. பூவே உனக்காக ஹிட்டானவுடன் தொடர்ந்து சூப்பர் ஹிட் பிலிம்ஸ் தயாரிப்பில் துள்ளாத மனமும் துள்ளும், லவ் டுடே, ஷாஜகான் என தொடர்ந்து படங்களில் நடித்தார். இத்தனைக்கும் ஆர்.பி.சவுத்ரி சார் என்ன சம்பளம் கொடுக்கிறாரோ அதை வாங்கிக் கொள்வார்.. ஒரு நாள் கூட இவ்வளவு சம்பளம் வேண்டும் என விஜயோ, எஸ்.ஏ.சந்திரசேகரோ அவரிடம் கேட்டதில்லை. இப்போதுள்ள நடிகர்கள் விஜயை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்’ அவர் சொல்லியிருக்கிறார்.

Tags

From Around the web