27 ஆண்டுகளை நிறைவு செய்த மின்சார கண்ணா

விஜய் நடிப்பில் வெளிவந்த மின்சார கண்ணா படம் வெளியாகி 27 ஆண்டுகள் ஆகிறது.
 

விஜய், ரம்பா, மோனிகா மற்றும் குஷ்பு நடிப்பில் வெளியான படம் மின்சார கண்ணா. முத்து படையப்பா போன்ற வெற்றிப்படங்களை கொடுத்து பிஸியாக இருந்த காலத்தில் கே.எஸ்.ர்ரவிகுமார் இயக்கியிருந்தார் இந்த படத்தை. 80, 90களில் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான கே ஆர்.ஜி புரொடெக்சன் இப்படத்தை தயாரித்திருந்தது. ரஜினி நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படையப்பா படத்தில் இடம்பெற்ற மின்சார கண்ணா பாடலில்ன் வரிகளையே இப்படத்திற்கு தலைப்பாக வைக்கப்பட்டது.

தேவா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். ஊதா ஊதா ஊதாப்பூ, உன் பேர் சொல்ல ஆசைதான் ஆகிய பாடல்கள் ரசிகளிடம் அதிகம் சென்றடைந்தது.

27 ஆண்டுகளை நிறைவு செய்த மின்சார கண்ணா

விஜய் - கே. எஸ்.ரவிக்குமார் இணைந்து பணிபுரியும் படம் என்பதால் இப்படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் சுவாரஸ்யமில்லாத திரைக்கதையால் படம் தோல்வியை தழுவியது. விஜயுடன் கே. எஸ் ரவிகுமார் சேர்ந்து பணிபுரிந்த ஒரே படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1999ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி இப்படம் வெளியானது. இன்றுடன் இப்படம் வெளியாகி 27 ஆண்டுகள் நிறைவு செய்கிறது.

From Around the web