கலங்க வைத்த விஜய் பேச்சு… ரசித்துப் பார்த்த ரஜினி..!
இளைய தளபதி விஜய் இந்திய சினிமா ஆரம்பித்து 100 ஆண்டுகள் ஆகியதையொட்டி நடந்த விழாவில் இப்படி பேசியுள்ளார். அப்போது அவர் 20 வருடங்களாக சினிமாவில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி என்ன சொன்னாருன்னு பாருங்க.
இந்திய சினிமா சுவாசிக்க ஆரம்பிச்சி 100 வருஷமாச்சு. வருஷங்கள் கூட கூட இளமையா இருக்குற ஒரே விஷயம் சினிமா தான். இன்னும் 100 வருஷம் ஆனாலும் பல பரிமாணங்கள்ல சினிமா இன்னும் வாழ்ந்துகிட்டே இருக்கும். அப்படிப்பட்ட சினிமா உருவாகறதுக்கு வியர்வை சிந்தி எத்தனையோ பேர் உழைக்கிறாங்க. அதுல ரத்தம் சிந்தி உழைக்கிற கூட்டம் இருக்கு.
அதுதான் நம்ம ஸ்டண்ட் யூனியன். தெரியாம நடக்குறதுதான் விபத்து. ஆனா விபத்து நடக்கும்னு தெரிஞ்சும் அந்த இன்சிடண்ட அவங்க செஞ்சிக்கிட்டு இருக்காங்க. ஒரு ஸ்டண்ட் கலைஞர் சூட்டிங் ஸ்பாட்ல வந்த தன்னோட மனைவியும், குழந்தைகளையும் பார்த்துக்கிட்டே இருந்தாங்க.
அப்போ அவருக்கு அந்த படபடப்பு இருந்தது. அதை என்னால மறக்கவே முடியல. இன்னொரு முறை கார் ஜம்ப் ஆகி 3 டைம் ரோல் ஆகி விழணும். அது ரொம்ப ரிஸ்க்கான ஷாட். அந்த ஷாட் நடக்குறதுக்கு முன்னாடி ஸ்டண்ட் கலைஞர் அவரு பொண்ணுகிட்ட போன்ல பேசிட்டு வந்தார்.
எங்கிட்ட அந்த ஸ்டண்ட் கலைஞர் பேசுனாரு. திரும்பவும் நான் என் பொண்ணைப் பார்ப்பேனான்னு தெரியலன்னு சொல்லிட்டுப் போனாரு. ஆனாலும் இது நடந்து 10 வருஷம் இருக்கும். இன்னைக்கும் அது என் காதுல கேட்டுக்கிட்டே இருக்குன்னு சொன்னார் விஜய். இதை அந்த நிகழ்வில் வந்து இருந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மிகவும் ரசித்துப் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
