ரஜினிக்காக ஏ.ஆர்.முருகதாஸ் எழுதிய 'ரமணா'-வில் விஜயகாந்த் வந்தது எப்படி?

 
Rajini Ramana Vijayakanth Ar murugadoss

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜயகாந்த் காம்பினேஷனில் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பினை பெற்ற படம் தான் 'ரமணா'. இதை 'ஆஸ்கர் ஃபிலிம்ஸ்' நிறுவனம் சார்பில் வி.ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார்.

இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு தான் ஒளிப்பதிவு செய்திருந்தார். சமீபத்தில், இவர் கொடுத்த பேட்டியில் 'ரமணா' படம் குறித்து பேசுகையில் "ரஜினிகாந்த் சாரை மைண்ட்ல வச்சு தான் ஏ.ஆர்.முருகதாஸ் 'ரமணா' கதையை எழுதினார். அவர் அந்த கதையை 'ஆஸ்கர் ஃபிலிம்ஸ்' ரவிச்சந்திரன் சார்கிட்ட சொன்னார்.

கதை ஓகே ஆயிருச்சு. ஆனா, ரவிச்சந்திரன் சார் வந்து ரஜினி சாரை இப்ப பிடிக்க முடியாது ரொம்ப கஷ்டம். விஜயகாந்த் சார் தான் நமக்கு கொஞ்சம் நெருக்கத்துல இருக்காருன்னு சொன்னார். ஏன்னா, அவங்க வந்து ஆல்ரெடி விஜயகாந்த் சாரை வச்சு 'வானத்தைப்போல'-ங்குற படத்தை தயாரிச்சிருந்தனால, அவருக்கும், இவருக்குமான தொடர்பு நல்லா இருந்துச்சு. 

Ramana shooting spot MS Prabhu

அப்புறம் ரவிச்சந்திரன் சார் முருகதாஸ் கிட்ட, ரஜினி சாரை வச்சு படம் பண்ண எவ்ளோ வருஷம் வெயிட் பண்ணனும்ன்னு தெரியல. இன்னொன்னு, இந்த கதைய அவர் பண்ணுவாரான்னும் தெரியல. ஆனா, விஜயகாந்த் சாரை வச்சு நம்ம இதை உடனே படமாக்கிடலாம்ன்னு சொன்னார்.

அப்புறம் முருகதாஸுக்கும், விஜயகாந்த் சார் இந்த கதைக்கு கரெக்ட் சாய்ஸா தான் இருப்பாருன்னு மனசுல பட்டதும் தான், ஓகே இவர வச்சே பண்ணிடலாம்ன்னு சொல்லிட்டார்" என்று கூறியுள்ளார்.

From Around the web