விஜயகாந்த், இப்ராகிம் ராவுத்தரைப் பிரிய இதுதான் காரணமா? வெட்ட வெளிச்சமாக்கிய பிரபலம்!
விஜயகாந்தின் ஆரம்ப கட்ட காலத்தில் அவரது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் தயாரிப்பாளரும், அவரது நெருங்கிய நண்பருமான இப்ராகிம் ராவுத்தர். அப்போதெல்லாம் அவர் என்ன சொன்னாலும் விஜயகாந்த் கேட்பாராம். அவரது வளர்ச்சியில் அவ்வளவு அக்கறை கொண்டவர் தான் இப்ராகிம் ராவுத்தர். அதே போல விஜயகாந்திடம் கால்ஷீட் கேட்டு கதை சொல்ல வருபவர்கள் இப்ராகிம் ராவுத்தரிடம் தான் முதலில் கதை சொல்வார்களாம்.
அவர் ஓகே சொன்னால் தான் விஜயகாந்த் நடிக்க சம்மதம் தெரிவிப்பாராம். அந்தளவு இருவரும் இணைபிரியா நண்பர்களாக இருந்தனர். அப்பேர்ப்பட்ட நட்பு அது எப்படி பிற்காலத்தில் பிரிந்தது என்ற கேள்வி பலருக்கும் எழுவதுண்டு. அதற்கு பிரபலம் ஒருவர் இப்படி பதில் சொல்லி இருக்கிறார். வாங்க அது என்னன்னு விவரமா பார்ப்போம். விஜயகாந்துக்கும், இப்ராகிம் ராவுத்தருக்கும் பிரிவு ஏற்பட என்ன காரணம்னு ரசிகை ஒருவர் கேட்க, அதற்கு பதில் அளித்துள்ளார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன். வாங்க என்ன சொன்னாருன்னு பார்க்கலாம்.
விஜயகாந்த் திரை உலகில் நிலைபெறவும், மிகப்பெரிய உயரத்தைத் தொடவும் இப்ராகிம் ராவுத்தர் மிகப்பெரிய அளவிலே காரணமாக இருந்தாலும், அவ்வளவு பெரிய உயரத்துக்கு வந்ததுக்குப் பின்னாலே இப்ராகிம் ராவுத்தருக்கு விஜயகாந்த் மரியாதை கொடுத்தார். அது அளவிட முடியாதது. அவர் கிழித்த கோட்டை விஜயகாந்த் தாண்ட மாட்டார்.
அந்தளவுக்கு தன்னுடைய நண்பர் மேல் மிகுந்த மரியாதையும், நட்பும் வைத்து இருந்தார். அவர்களது நட்பு எத்தனை ஆண்டுகாலம் நீடித்தது என்பது நாம் அறிந்த விஷயம். அப்படி ஒரு நெருக்கமான நட்பை சுற்றி இருப்பவர்கள் எவ்வளவு நாள்கள் பொறுத்துக்கிட்டு இருப்பாங்க? அவர்கள் தங்களால் முடிந்த கீறல்களை அங்கங்கே போட அதன் காரணமாகத்தான் ஒரு காலகட்டத்தில் இருவருக்கும் இடையே பிரிவு வந்தது என்கிறார் சித்ரா லட்சுமணன்.
