பொன்னம்பலம் கல்யாணத்தன்று விஜயகாந்த் செய்த பேருதவி!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் பொன்னம்பலம். இவர் பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.
சமீபத்தில், பொன்னம்பலம் கொடுத்த பேட்டி ஒன்றில் பிரபல நடிகர் விஜயகாந்த் குறித்து பேசுகையில் "நானும் விஜயகாந்த் சாரும் 'பரதன்' படத்துல நடிச்சிட்டு இருந்தோம்.
அப்போ எனக்கும், அவருக்கும் ஒரு ஃபைட் சீன் விடிய விடிய எடுத்தாங்க. காலைல 3 மணிக்கு தான் முடிஞ்சது. எனக்கு அடுத்த நாள் காலைல கல்யாணம்.
அதுனால பணம் வேற தேவைப்படுது. புரொடக்ஷன்ல கேட்டிருந்தேன், ஆனா அவங்க கொடுக்கல. அப்போ விஜயகாந்த் சார் தான் கேட்டாரு, உனக்கு நாளைக்கு கல்யாணம்ல. ஏன்னா, நான் அவருக்கு ஆல்ரெடி பத்திரிக்கை கொடுத்திருந்தேன்.
அப்புறம் கல்யாணம் இருக்குற நேரத்துல ஏன் இவருக்கு நைட் ஷூட் வச்சீங்கன்னு சார் புரொடக்ஷன்ல கேட்டுட்டு கிளம்பிட்டார். நான் வேலை செஞ்ச tired-ல நல்லா தூங்கிட்டேன். காலைல 6 மணிக்கு தான் எழுந்திருச்சு, வேகமா கிளம்பி கல்யாண மண்டபத்துக்கு போறேன்.
அங்க சரியான கூட்டம். அப்படியே உள்ள போய் பார்த்தா, விஜயகாந்த் சார் உட்கார்ந்திருக்கார். அவரும் என்கூட தான வொர்க் பண்ணிட்டு வந்தாருன்னு எனக்கு ஆச்சர்யம். அப்புறம் கல்யாணம் முடிஞ்சதும், எங்கள ஆசிர்வாதம் பண்ணிட்டு, கல்யாண செலவு எவ்ளோ?-ன்னு சொல்லு தர்றேன்னு சொல்லிட்டு கைல ரூ.2.30 லட்சம் கொடுத்துட்டு தான் கிளம்பினார்" என்று கூறியுள்ளார்.
