எம்.ஜி.ஆர் படத்துக்கு வந்த எதிர்ப்பு!.. சவால் விட்டவருக்கு சேலை, வளையல் அனுப்பிய விஜயகாந்த்....

 
mgr vijayakanth

தான் நடிக்கும் திரைப்படங்களில் காட்சிகள் வழியாகவும், பாடல் வரிகள் வழியாகவும் திமுகவை புரமோட் செய்தவர் எம்.ஜி.ஆர். இன்னும் சொல்லப் போனால் திராவிட முன்னேற்றக் கழகத்தை பட்டி தொட்டியெங்கும் கொண்டு போய் சேர்த்தவரே எம்.ஜி.ஆர்தான். ஆனால் கலைஞர் கருணாநிதியோடு அவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டு திமுகவிலிருந்து விலகி அதிமுக என்கிற கட்சியை தொடங்கியதும் திமுக தரப்பிலிருந்து அவருக்கு பல எதிர்ப்புகளும், பிரச்சனைகளும் வந்தது. அதையெல்லாம் சமாளித்து தொடர்ந்து 3 முறை தமிழகத்தின் முதலமைச்சராக எம்.ஜி.ஆர் இருந்தார்.

கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது எம்.ஜி.ஆர் உலகம் சுற்றும் வாலிபன் என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கி நடித்தார். ஆனால், அந்த படத்தை தமிழகத்தில் வெளியிடக்கூடாது என்பதற்காக பல திட்டங்களும் தீட்டப்பட்டது. தமிழகத்தில் பிரிண்ட் போட முடியாது என்பதால் மும்பை சென்று அங்கு பிரிண்ட் போட்டு படத்தை ரிலீஸ் செய்தார் எம்.ஜி.ஆர்.

mgr vijayakanth

ஒருபக்கம் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை மதுரையில் ரிலீஸ் பண்ண விட மாட்டேன்.. அப்படி ரிலீஸானா புடவை கட்டிக்கிறேன்.. வளையல் போட்டுக்கிறேன் என்று அப்போது மதுரை திமுக மேயராக இருந்த முத்து சவால் விட்டார். படம் திரைக்கு வராமல் இருக்க தியேட்டர் மற்றும் விளம்பர ரீதியான பல பிரச்சினைகளை கொடுத்தார்.

எம்.ஜி.ஆரின் ரசிகராக இருந்த விஜயகாந்த் களத்தில் இறங்கி படம் ரிலீஸாக உதவினார். முத்துவுக்கு புடவை, வளையல்கள் ஆகியவற்றை பார்சல் அனுப்பினார். இந்த தகவலை விஜயகாந்த்துக்கு நெருக்கமானவாரக இருந்த கதாசிரியரும், வசனகர்த்தவும் லியாகத் அலிகான் ஊடகம் ஒன்றில் கூறியிருக்கிறார்..

Tags

From Around the web