விஜயகாந்த் - ஆர்.சுந்தர்ராஜன் கூட்டணியில் வந்த படங்கள் -ஒரு பார்வை

கேப்டன் விஜயகாந்துடன் வெள்ளிவிழா இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய படங்கள் குறித்த விபரங்களை இங்கே காண்போம்.
 
viijayakanth

1. வைதேகி காத்திருந்தாள் - 175 நாட்கள் (வெற்றி)

விஜயகாந்த, ரேவதி நடிப்பில் கடந்த 1984ம் ஆண்டு வெளியான படம் வைதேகி காத்திருந்தாள். ஆர்.சுந்தராஜன் இயக்கிய இந்த பட அடிப்படையில் இளையராஜா இசையமித்து வைத்திருந்த பாடல்களை கொண்டு உருவாக்கப்பட்டது. மிகப்பெரிய வெற்றி பெற்ற விஜயகாந்திற்கு முன்னணி நடிகருக்கான இடத்தை உறுதிபடுத்தியது. 

2. அம்மன் கோவில் கிழக்காலே - 175 நாட்கள் (வெற்றி)

vijayakanth

கடந்த 1986ம் ஆண்டு வெளியான படம் அம்மன் கோவில் கிழக்காலே. விஜயகாந்த், ராதா, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.இப்படத்தின் பாடல்கள் இன்றளவும் பிரபலம். மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படம் அந்த காலகட்டத்திலேயே ஒரு கோடிக்கு மேல் வசூல் செய்தது.

3. காலையும் நீயே மாலையும் நீயே - 75 நாட்கள் (தோல்வி)

விஜயகாந்த், பிரபு இணைந்து நடித்திருந்த ஒரே படம் காலையும் நீயே மாலையும் நீயே.இவரகளுடன் ராதிகா, ரேகா, லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு தேவேந்திரன் இசையமைத்திருந்தார். மிகவும் எதிர்பார்ப்புடன் வந்த இப்படம் தோல்வி அடைந்தது.


4. தழுவாத கைகள் - 50 நாட்கள் (தோல்வி)

1986ம் ஆண்டு வெளியான இப்ப்படத்தில் விஜயகாந்த், அம்பிகா, அனுராதா உள்ளிட்ட ப்பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்த இப்படம் தோல்வி படமாகவே அமைந்தது.

5. என்கிட்ட மோதாதே - 75 நாட்கள் ( தோல்வி)

ஆர்.சுந்தராஜன் தயாரித்து  இயக்கிய இந்த படத்தில் விஜயகாந்துடன் ஷோபனா, குஷ்பு, நிழல்கள் ரவி உள்ளிட்ட ப்பலர் நடித்திருந்தனர். மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் வந்த இப்படம் சுமாரான வெற்றியையே பெற்றது.

6. என் ஆசை மச்சான் - 100 நாட்கள் (வெற்றி)

விஜயகாந்த் நண்பப்ர் ராவுத்தர்  தயாரித்த இந்த படத்தில்  விஜயாந்துடன் முரளி, ரேவதி, ரஞ்சிதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேவா இசையமைப்பில் ப்பாடல்கள் மிகப்ப்பெரிஅய் வரவேற்ப்பை பெற்றது. படமும் நல்ல வெற்றியை  பெற்றது.
 
7. காந்தி பிறந்த மண் - 50 நாட்கள் ( தோல்வி)

என் ஆசை மச்சான் படத்தின் வெற்றியை அடுத்து இணைந்த இக்கூட்டணியில் வெளியான இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. 

From Around the web