சுதா கொங்கரா மேடமோட ஸ்கிரிப்ட்ல இல்லாததை force பண்ணி 'துரோகி'-ல பண்ண வச்சாங்க... உண்மையை போட்டுடைத்த விஷ்ணு விஷால்!
சூர்யாவின் 'சூரரைப் போற்று', சிவகார்த்திகேயனின் 'பராசக்தி', மாதவனின் 'இறுதிச்சுற்று' போன்ற படங்களை இயக்கியவர் தான் பெண் இயக்குநர் சுதா கொங்கரா. இவர் தமிழில் இயக்கிய முதல் படம் தான் 'துரோகி'.
இதில் விஷ்ணு விஷால், ஶ்ரீகாந்த், பூர்ணா, பூனம் பாஜ்வா, தியாகராஜன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் சுதா கொங்கராவுக்கு வெற்றிப் படமாக அமையாமல், தோல்வி படமாகத் தான் அமைந்தது.
சமீபத்தில், நடிகர் விஷ்ணு விஷால் கொடுத்த பேட்டியில் இந்த படம் குறித்து பேசுகையில் "'துரோகி' பண்ணும் போது சுதா கொங்கரா மேடம் ரொம்ப terror. அவங்ககிட்ட command இருந்துச்சு, clarity இருந்துச்சு. ஆனா, சில விஷயங்கள், அதை என்னால் இப்போ கேமரா முன்பு சொல்ல முடியாது.

சினிமால நிறைய politics இருக்கு. ஒரு படம் சரியா வரணும்ன்னா, எல்லாருமே ஒரே மாதிரி யோசிக்கணும். அந்த யோசனை கொஞ்சம் மாறுனா கூட, படம் நினைச்ச மாதிரி வராது. இன்னைக்கு கூட 'துரோகி' தப்பான படம் இல்ல, நல்ல படம் தான்னு சிலர் சொல்வாங்க. ஆனா, எனக்கு, சுதா மேடமுக்குலாம் அந்த படம் வொர்க் ஆகல.
ஏன்னா, சுதா மேடம் என்ன ஸ்கிரிப்ட்ல எழுதியிருந்தாங்களோ அது screen-ல வரல. சில காரணங்களால அவங்கனாலையே அதை கொண்டு வர முடியல. அவங்க ஷூட்டிங் டைம்லையே breakdown ஆயிட்டாங்க. அவங்க நம்ம எழுதினது வேற, ஆனா, நம்மள force பண்ணி வேற ஒன்னு பண்ண சொல்றாங்களேன்னு ரொம்ப ஃபீல் பண்ணாங்க" என்று கூறியுள்ளார்.
