ரஜினியைக் கேள்வியால் மடக்கப் பார்த்த விவேக்...! ஆனால் வந்ததோ நெத்தியடி பதில்!

 

சூப்பர்ஸ்டார் ரஜினி இன்று எந்த உயரத்தில் இருக்கிறார் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இன்றைக்கு ரஜினி என்னவாக இருக்கிறாரோ, அது அவரது கனவு இல்லை. அவரது கனவு மிகவும் சிறியதாக இருந்தது. அப்படிப்பட்ட கனவில் இருந்த உங்களுக்கு இன்று இப்படிப்பட்ட வாழ்க்கை அமைந்து இருக்கிறது. அதைப்பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க என்று நடிகர் விவேக் ஒருமுறை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தைப் பார்த்துக் கேட்டார்.

என்னைப் பொருத்தவரைக்கும் நான் வாழ்க்கையில எது எதுக்கெல்லாம் ஆசைப்பட்டேனோ அதைப் போல பல 100 மடங்கு கடவுள் எனக்குக் கொடுத்துருக்காரு. அப்படி பல 100 மடங்கு கொடுத்ததுக்குப் பின்னாலே மிகப்பெரிய சந்தோஷம் எனக்குள்ள இருக்கான்னு சொன்னா, கண்டிப்பா இல்லன்னு தான் நான் சொல்வேன்.

ஏன்னா, வாழ்க்கையில எப்போதுமே பார்த்தீங்கன்னா, எதையும் தேடிக்கொண்டே இருக்கணும். ஒரு விஷயத்தைத் தேடிக்கொண்டு இருக்கும்போது தான் நமக்கு த்ரில். நம்ம தேடுற விஷயம் கிடைச்சிட்டுன்னா நிச்சயம் அதுல த்ரில் இருக்காது. அதனால அந்த த்ரில் இருக்கே... அதை நான் இழந்துட்டேன் அப்படின்னுதான் சொல்லணும்னு நடிகர் விவேக்கிற்குப் பதில் சொன்னார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

From Around the web