துப்பாக்கி, கத்தியுடன் அலைந்த எம்ஆர்.ராதா... எல்லாம் அந்த கும்பலுக்காகத்தானாம்!

 

நாடகங்கள் நடத்துவதற்கு எல்லா கலைஞர்களும் என்ன எடுத்துக்கிட்டுப் போவாங்க? கையில ஸ்கிரிப்ட் புத்தகத்தை எடுத்துட்டுப் போவாங்க. அந்த நாடகங்கள்ல என்னென்ன வேடத்துல நடிக்கணுமோ அதற்கான உடைகளை எடுத்துச் செல்வார்கள்.

ஆனால் எம்ஆர்.ராதா நாடகங்கள்ல நடிக்கும்போது எதையெல்லாம் எடுத்துட்டுப் போவார் தெரியுமா? ஒரு பக்கம் துப்பாக்கி இன்னொரு பக்கம் அரிவாள். அதுக்கு என்ன காரணம்னா தன் மனதுக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அதை மேடையில் சொல்வதற்கு என்றைக்குமே எம்ஆர்.ராதா தயங்கியது இல்லை. அதன் காரணமாகத்தான் பல போராட்டங்களையும் பல எதிர்ப்புகளையும் அவருடைய நாடகங்களும் சந்திக்க வேண்டி வந்தது. அந்த நாடகங்களிலே கதாநாயகனாக நடித்த எம்ஆர்.ராதாவும் சந்திக்க வேண்டி வந்தது.

அதனாலதான் நாடகம் நடத்த போகும்போது கூடவே துப்பாக்கி, கத்தி இதெல்லாம் எடுத்துக் கொண்டு போவது என்னோட வழக்கம். எல்லோரும் என்னைப் பொல்லாதவன், ரவுடி, அப்படின்னுலான் தான் நினைச்சிட்டு இருந்தாங்க. இது அப்போ மட்டும் இல்ல. இப்ப கூட பல பேர் அப்படித்தான் நினைச்சிட்டு இருக்காங்க.

ஆனா அதைப் பத்தி நான் கவலைப்பட்டதே இல்லை. அப்படி அவங்க நினைக்கிறதை எனக்கு ஒரு வகையில சௌகரியமா இருக்கு. நான் ரவுடிங்கறதால பயந்துக்கிட்டு என்னை சுத்தி நிறைய பேரு வர்றதே இல்லை. அதனால அனாவசியமான ஜால்ரா கும்பல் என்னை சுத்தி இருந்தது கிடையாது.

நான் உண்டு. என் தொழில் உண்டு. அப்படின்னு நான் இருக்கேன்னா அதுக்கு முக்கியமான காரணம். நானே எதிர்பார்க்காமல் என்னைச் சுற்றி அமைந்த அந்த வேலி தான் என்று ஒரு பத்திரிகைப் பேட்டியில் பதிவு செய்துள்ளார் எம்ஆர்.ராதா.

From Around the web