மத்தவங்க மாதிரி எல்லாம் முடியாதாம்... அந்த நேரத்துல ரஜினியின் எண்ண ஓட்டம் எப்படி இருக்கும்?

 
rajni speech

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தைப் பொருத்தவரைக்கும் அவர் எந்த மேடையில் கலந்து கொண்டாலும் அந்த விழா மேடையே கலகலக்கும். அந்தளவு பேச்சாற்றல் கொண்டவர் ரஜினி. அதனால்தான் அவர் வந்து நம்மோட விழாக்களில் எல்லாம் கலந்து கொள்ள மாட்டாரா என்ற ஏக்கம் பலருக்கும் இருக்கு. மிக நெருக்கமான நண்பர்களாக இருந்தாலும் கூட அவங்க எல்லாரது விழாக்களிலும் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவில்லைன்னா அதுக்கு காரணம் இருக்கு. அதுபற்றி பத்திரிகை பேட்டி ஒன்றில் பதில் சொல்லி இருக்கிறார். என்னன்னு பாருங்க. 

நான் அடுத்த மாசம் ஒரு விழாவில் கலந்து கொள்ள தேதி கொடுத்து இருக்கேன்னா, இன்னைக்கே இருந்தே அதைப் பற்றி தினமும் ஒருமுறையாவது சிந்திக்க ஆரம்பித்து விடுவேன். அந்த விழாவில் யார் யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்காங்க. அவங்ககிட்ட நாம என்னென்னவெல்லாம் பேசலாம்? இப்படி என்னுடைய எண்ண ஓட்டம் போய்க்கிட்டே இருக்கும்.

இன்னொன்னு அதுவே என் மனசுக்குள்ள ஒரு பெரிய பொறுப்பா மாறிடும். அதன் காரணமாகவே நான் பல விழாக்களில் கலந்து கொள்வதைத் தவிர்க்கிறேன். நிகழ்ச்சின்னா நேரா போய் அப்படியே கலந்துக்குவேன்னு பலர் சொல்வாங்க. ஆனா என்னால அப்படி எல்லாம் முடியாது.

எந்த சின்ன நிகழ்ச்சியாக இருந்தாலும் என்னைத் தயார் பண்ணிக்கிட்டுத் தான் அந்த நிகழ்ச்சிக்குப் போவேன். மத்தபடி மனசுக்குள்ள ஒரு கமிட்மெண்ட் வந்துட்டா போதும். தடதடன்னு அந்த விழாவில பேசிட்டு வந்துடுவேன் என்று அந்தப் பத்திரிகைப் பேட்டியில் பதிவு செய்துள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினி.

Tags

From Around the web