80களை தமிழ்சினிமா உலகின் பொற்காலம்னு சொல்றாங்க... அட இதுதான் காரணமா?

 
rajni, kamal, vijayakanth

தமிழ்சினிமா உலகின் பொற்காலம்னா அது 1980 காலகட்டம்தான். அப்போ அப்படி என்னதான் நடந்தது? வாங்க பார்க்கலாம். 

1980களை தமிழ்சினிமா உலகின் பொற்காலம்னு சொல்றாங்க. அப்படி சொன்னாங்கன்னா அதுக்கு பல காரணங்கள் இருக்கு. அதுல முதல் காரணம் அந்தக் காலத்துல தயாரிக்கப்பட்ட படங்கள் மிகப்பெரிய அளவில் ஓடலன்னா கூட தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய பொருட்சுமை இருக்காது.

அதைத் தாண்டிப் பார்த்தா, படப்பிடிப்பு நடத்துறதே ஒரு இனிமையான அனுபவமா இருக்கு. அந்தளவுக்குப் படத்துல பணியாற்றிய நடிகர், நடிகைகள் எல்லாரும் தயாரிப்பாளர்களோடு ஒன்றிணைந்து செயல்பட்டார்கள். அதனால்தான் அந்தக் காலத்தைப் பொற்காலம்னு இன்று வரை எல்லோரும் சொல்லிக் கொண்டு இருக்காங்க என்கிறார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன். 

இந்த பொற்காலத்தில் தான் பல நடிகர்கள் முன்னணி கதாநாயகர்கள் ஆனார்கள். கமல், ரஜினி, விஜயகாந்த், பிரபு, கார்த்திக், மோகன், டி.ராஜேந்தர், பாக்கியராஜ், முரளி, ராம்கி, மம்முட்டி, சிரஞ்சீவி, தியாகராஜன்னு பலரையும் சொல்லிக் கொண்டே போகலாம். இதே காலகட்டத்தில் தான் ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா, ராதா, அம்பிகா, ஊர்வசி, ராதிகா, ரதி, நதியா, ரேவதி, அமலான்னு பல முன்னணி கதாநாயகிகளும் வலம் வந்தனர்.

அனைவரது படங்களும் சக்கை போடு போட்டன. அனைத்து படங்களுமே தயாரிப்பாளர்களின் கையைக் கடிக்காமல் குறைந்தபட்சம் போட்ட முதலையாவது திருப்பித் தந்தன. பெரும்பாலான படங்கள் ஹிட் அடித்தன. யார் நடிகர்னு கூட பார்க்க மாட்டாங்க. கதை நல்லாருந்தா படம் ஓடும் என்ற கான்செப்ட் இந்தக் காலகட்டத்தில் தான் தமிழ்சினிமா உலகில் வந்தது.

Tags

From Around the web