கார்த்திக்கின் அந்த படத்தை திரும்ப திரும்ப பார்த்த விஜய்..காரணம் இதுதான்

விஜய் நடிப்பில் கடந்த 2000ம் ஆண்டு வெளியான படம் பிரியமானவளே. சிம்ரன், விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
 
vijay

விஜய் நடிப்பில் கடந்த 2000ம் ஆண்டு வெளியான படம் பிரியமானவளே. சிம்ரன், விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தெலுங்கில் ஹிட்டான பவித்ர பந்தம் படத்தினை தமிழில் ரீமேச் செய்து செல்வபாரதி இயக்கியிருந்தார்.  முதலில் இந்த படத்தில் நடிக்க நடிகர் கார்த்திக்கை அணுகியிருந்தனர். காரணம் கதைப்படி  நாயகன் வெளி நாட்டிலிருந்து இந்தியா திரும்புவதும், அங்கு ஒரு பெண்ணை லிவிங்கில் இருப்பதுபோல அமைக்கப்படிருந்தது. எனவே கார்த்திக்கின் இயல்பான வசீகரம்,  ஸ்டைல்  அந்த கதாபாத்திரம் அப்படியே கச்சிதமாகப் பொருந்தியிருக்கும். 

priyamanavale

ஆனால் அவர் வேற்று படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் விஜய்க்கு அந்த வாய்ப்பு வந்தது. படப்பிடிப்பிற்கு முன்பு விஜய் அந்த கதையை உணர்ந்து கார்த்திக் நடித்த கோகுலத்தில் சீதை படத்தினை டீவிடி தேயும் அளவிற்கு பார்த்தாராம். இன்று நீங்கள்  பிரியமானவளே  படத்தை  பார்த்தால், கார்த்திக்கின் அந்த ஸ்டைலான நடிப்பின் மெல்லிய தாக்கத்தை விஜய்யின் நடிப்பில் உங்களால் கவனிக்க முடியும். அந்த அளவிற்கு விஜய் தனது சிறப்பான நடிப்பினை கொடுத்திருப்பார். இப்படம் ட்தமிழிலும் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.
 

From Around the web