Thudarum: மீண்டும் பார்முக்கு திரும்பிய மோகன்லால்… துடரும் படம் எப்படி இருக்கு?

Thudarum: மோகன்லால் நடிப்பில் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் துடரும் படத்தின் மைனஸ், பிளஸ்களை அலசும் திரை விமர்சனம் இது!.
மோகன்லால், சோபனா, பிரகாஷ் வர்மா, தாமஸ் மேத்யூ நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் துடரும். தருண் மூர்த்தி இயக்கத்தில் பெரிய அளவு பரபரப்பு இல்லாமல் ரிலீஸான இப்படம் தற்போது பெரிய அளவு லைக்ஸ் குவிக்க தொடங்கி இருக்கிறது.
ரொம்ப நாளுக்கு பின்னர் எமோஷனல் டிராமாவில் மீண்டும் இறங்கி இருக்கிறார் மோகன்லால். ஓவர் டிராமா இல்லாமல் வெகு சாதாரண குடும்ப தலைவன் கேரக்டர். அம்பாசிடர் ஓட்டும் சாதாரண டாக்ஸி டிரைவராக நடித்து இருக்கிறார்.
அவர் மனைவியாக ஷோபனா. ஒருநாள் கஞ்சா இருந்ததாக அவருடைய டாக்ஸியை போலீஸ் அதிகாரிகள் எடுத்து செல்கின்றனர். அந்த பிரச்னையை எப்படி சமாளித்தார். மீண்டும் தன்னுடைய காரை கைப்பற்றினாரா என்ற சிம்பிளான கதைதான்.
ஆனால் திரிஷ்யம் போல கதை மெதுவாக தொடங்கி பல இடங்களில் சூடு பிடித்துவிடுகிறது. வஞ்சிக்கோட்டை வாலிபன், எம்புரான் என தொடர் தோல்விக்கு பின்னர் மோகன்லாலின் ஹிட் லிஸ்ட்டில் இணைந்து இருக்கிறது இந்த துடரும்.

திரைக்கதை பல இடங்கள் வாவ் சொல்ல வைக்கிறது. அதற்கேற்ப ஒளிப்பதிவாளர் சாஜி குமார் அட்டகாசமான காட்சிகளால் மிரள விட்டு இருக்கிறார். படமே ரோலர்கோஸ்டராக இருக்கிறது. பல இடங்களில் நாமும் உள்ளே இருப்பது போல பிரம்மை.
பல கோடி பட்ஜெட் இல்லாமல் சிம்பிளாக சொல்லியதே படத்திற்கு பிளஸாக அமைந்துவிட்டது. திரிஷ்யமில் இருந்த அதே மோகன்லாலை மீண்டும் பார்க்க முடிகிறது. சமீபகாலமாக மலையாள படங்கள் அடடா ரகமாகி வரும் நிலையில் இந்த படமும் அதில் இணைந்து இருக்கிறது.