‘ஜிங்குச்சா’வா? கமல் வரியில் ‘தக் லைஃப்’ படத்தின் முதல் சிங்கிள் அப்டேட்

thug life
Thug Life: கமல் மணிரத்னம் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் தக் லைஃப். நாயகன் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு பிறகு தக் லைஃப் படத்தின் மூலம் கமலும் மணிரத்னமும் இணைந்துள்ளனர். ஏற்கனவே நாயகன் திரைப்படம் ஒரு பெரிய கேங்க்ஸ்டர் திரைப்படமாகத்தான் அமைந்தது.
அந்த படத்திற்கான கிரேஸ் இன்னும் ரசிகர்கள் மத்தியில் குறையவில்லை. அது ஒரு கல்ட் கிளாசிக் படமாகவே பார்க்கப்பட்டது.அப்படி ஒரு வெற்றியை கொடுத்த இந்த கூட்டணி மீண்டும் இணைகிறார்கள் என்றால் ரசிகர்கள் மத்தியில் இன்னும் ஆர்வத்தை அதிகப்படுத்தியது.
கடந்தாண்டு துவங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இப்போது ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. படம் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவித்திருக்கிறார்கள். படத்தின் டீஸரும் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது.
படத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, திரிஷா போன்ற பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதுவும் ஒரு கேங்க்ஸ்டர் திரைப்படமாகத்தான் அமைந்திருக்கிறது. இந்த நிலையில் படத்தின் முதல் சிங்கிள் குறித்த அப்டேட்டை ராஜ்கமல் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. இந்த முதல் பாடலான ஜிங்குச்சா பாடலை கமல் எழுதியுள்ளார்.

இந்த முதல் சிங்கிள் வரும் 18 ஆம் தேதி வெளியாகும் என ராஜ்கமல் நிறுவனம் அறிவித்துள்ளது. ஜிங்குச்சா என ஆரம்பிக்கும் இந்தப் பாடலை கமல் எழுத சிம்புவுக்கான பாடலாக இருக்கும் என தெரிகிறது.