தக் லைஃப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. கமல், சிம்பு சேர்ந்து செய்த அலப்பறை.. செம ட்ரீட் இருக்கு!..

STR, Kamal
மணிரத்னம் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல் நடிக்கும் படம் தக் லைஃப். இந்தப் படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் கமலுடன் இணைந்து நடிக்கிறார். இதனால் படத்தில் பல காட்சிகள் இப்போ உள்ள ட்ரெண்ட்டுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
கமலுக்கு விக்ரம் படத்தைத் தொடர்ந்து நீண்ட எதிர்பார்ப்புடன் இந்தியன் 2 களம் இறங்க உள்ளது. வரும் ஜூன் 7 ம் தேதி இந்தியன் படத்தின் முதல் பாகம் ரிலீஸ் ஆகிறது. அதைத் தொடர்ந்து ஜூலை 12ம் தேதி இந்தியன் 2 படம் ரிலீஸாகிறது.
இதையும் படிங்க... அப்படியா செஞ்சாரு கவுண்டமணி? அலும்பு தாங்கலப்பா.. ஆனா அப்புறம் நடந்தது தான் ஆச்சரியம்..!
முன்னதாக இந்தியன் 2 படத்தின் ஆடியோ லாஞ்ச் ஜூன் 1ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. படத்திற்கான 2 சிங்கிள்கள் வெளியாகி விட்டது. முதல் பாடலாக பாராவும், 2வது ஒரு காதல் மெலடி பாடலாக நீலோற்பமும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதற்கிடையில் இந்தியன் முதல் பாகத்தில் ஏ.ஆர்.ரகுமான் அருமையாக மியூசிக் போட்டு இருந்தார். அந்த லெவலுக்கு இந்தியன் 2ல் இல்லை என பரவலாகக் கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன. இந்தப் படம் வெளியானால் தான் இதற்கு விடை கிடைக்கும். படத்தின் வெற்றியில் அனிருத்தின் பங்கு எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

STRK
தற்போது கமல், சிம்பு நடித்த தக் லைஃப் படத்துக்கு பர்ஸ்ட் சிங்கிள் கூடிய விரைவில் வெளியாகப் போகிறதாம். சமீபத்தில் கமல், சிம்பு இருவரும் இணைந்து ஆடிய இந்தப் பாடல் சென்னையில் படமாக்கப்பட்டதாம். இந்தப் பாட்டுக்கு அந்த அளவுக்கு இருவருமே இறங்கி வேற லெவலில் குத்தாட்டம் போட்டு கலக்கி இருக்கிறார்களாம்.
இருவருமே நடனத்தில் வல்லவர்கள் தான். அதனால் காதலா காதலா படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து காசு மேல பாட்டுக்கு கமல் ஆட்டத்தில் பொளந்து கட்டியிருப்பார். அது போன்ற ஒரு ரகத்தில் வேற லெவலில் இந்தப் பாடலும் வர இருப்பதாக பிரபல சினிமா விமர்சகர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
கமலும், சிம்புவும் ஒன்றாக டான்ஸ் போட்டால் தியேட்டரில் ரகளையாக இருக்குமே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்களாம்.