தக் லைஃப்ல லீக்கான அந்த மூணு விஷயங்கள்... ஹைப்பை அள்ளும் ஹைலைட்டுகள்

#image_title
38 ஆண்டுகளுக்குப் பிறகு கமல், மணிரத்னம் காம்போவில் வந்துள்ள படம் தக் லைஃப். இருவரது கூட்டணியில் ஏற்கனவே வெளிவந்த நாயகன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்.
அதனால் இந்தப் படத்திற்கும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எகிறிக்கொண்டுள்ளது. ரசிகர்கள் இதன் டைட்டில் டீசரைப் பார்த்ததும் அதில் கமல் போடும் மாஸான பைட் சீன் தெறிக்க விட்டு விட்டது. வேற லெவல் என்றெல்லாம் புகழாரம் சூட்டியிருந்தனர்.
அதன்பிறகு சிம்புவின் என்ட்ரி சீன் கிளிப்பிங்ஸ் வரும்போது அனல் பறந்தது. அது மட்டுமல்லாமல் படத்தில் கமலும், சிம்புவும் ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார்களாம். அதுவும் தெறிக்க விடுமாம்.

KMR
இப்படிப்பட்ட அதிவிசேஷமான இந்தப் படத்திற்கான படப்பிடிப்புககள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாம். இப்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் போய்க்கொண்டுள்ளது. படம் பொங்கலுக்கு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் படத்தைப் பற்றிய 3 செய்திகள் லீக்காகி உள்ளது. அது என்னென்னவென்று பார்ப்போமா...
சிம்பு டூப்பே போடாமல் ராஜஸ்தானில் நடந்த பைட் சீனில் நடித்து அசத்தியுள்ளாராம். அதுமட்டுமல்லாமல் கமல், சிம்பு இருவரும் குத்தாட்டப் பாடலுக்கு போடும் ஆட்டம் செம மாஸாக வந்துள்ளதாம்.
Also read: தக் லைஃப் கையில்தான் இந்தியன் 3ன் ரிலீஸ்… இது செம கிளாஷா இருக்கே..!
இந்தப் பாடல் ரொம்பவே ஹிட்டாகும் என்றும் சொல்கிறார்கள். அதே போல கமல் இந்தப் படத்தில் வெரைட்டி ஆப் கெட்டப்புகளில் வந்து கலக்குகிறாராம். அது மட்டுமல்லாமல் படத்தில் வரும் ப்ளாஷ்பேக் சீன் வேற லெவலில் உள்ளதாம்.
அப்படின்னா இந்த 3 விஷயங்களுக்காகவே படத்தைப் பார்த்து விட வேண்டியதுதான் என்று நீங்கள் சொல்வது புரிகிறது. மணிரத்னம் படம் என்பதால் கதையைக் காட்சிகளே பேசிவிடும். டயலாக்குகளுக்கு வேலை இருக்காது. வண்ணங்களே இங்கு எண்ணங்களைப் பிரதிபலிக்கும்.
கமல், சிம்பு கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ளதாலும் படத்தின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளனர். கமலும் சிம்புவுக்கு நிறைய ஆலோசனைகளைத் தந்துள்ளாராம். இருவருமே சினிமா பற்றிய பல விஷயங்களை நுணுக்கமாகத் தெரிந்து கொண்டவர்கள் அல்லவா... ஹைப் இருக்கத்தானே செய்யும். பொறுத்திருந்து பார்ப்போம்.