Cinema News
ஒரு சின்ன சீனுக்கு நாள் முழுவதும் கஷ்டப்பட்ட கமல்!.. மிரண்டுபோன தக் லைப் படக்குழு!…
5 வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருகிறார் கமல், சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தில் அதில் உள்ள எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அவருக்கு ஏற்பட்டது. தனது தொழில் நடிப்பு என்றாலும் கதை எழுதுவது, புத்தகம் படிப்பது, படத்தை இயக்குவது, பாடல்கள் எழுதுவது, பாடுவது, தயாரிப்பது என எல்லாவற்றையும் கற்றுக்கொண்டார்.
100வது படமாக ஒரு கமர்ஷியல் கதையில் நடிக்காமல் ராஜ பார்வை படத்தை தேர்ந்தெடுத்து அதில் கண்பார்வை இல்லாதவராக நடித்தார். அதுதான் கமல். பேசும்படம் என்கிற படத்தில் பேசமாலே நடித்தார். அபூர்வ சகோதரர்கள் படத்தில் குட்டி அப்புவாக வந்து ரசிகர்களுக்கு ஆச்சர்யம் கொடுத்தார்.
மைக்கேல் மதன காமராஜன் படத்தில் 4 கமலாக வந்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியதோடு, ரசிகர்களை ரசிக்கவும் வைத்தார். வித்தியாசமான கதைகளில், கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது கமலின் பெரும் தாகமாக இருக்கிறது. அதனால்தான், தனது திரை வாழ்வில் பல பரிசோதனை முயற்சிகளை செய்து பார்த்தார்.
குணா, ஹே ராம், குருதிப்புனல், மகாநதி, மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்கள் அப்படி வெளியானவைதான். கமலுக்கு மேக்கப் மூலம் தன்னை வித்தியாசமாக ரசிகர்களுக்கு காட்ட வேண்டும் என்பதில் ஆர்வம் அதிகம். நாயகன், அன்பே சிவம் ஆகிய படங்களை பார்த்தால் கமல் மேக்கப்புக்காக எப்படி மெனக்கெடுகிறார் என்பது புரியும்.
சும்மா ஒப்புக்கு மேக்கப் போடாமல் கதாபாத்திரத்திற்கு மேக்கப் பொருத்தமாக இருக்க வேண்டும் என அதிகம் மெனக்கெடுவார் கமல். சமீபத்தில் கல்கி படத்தில் வந்த கமலின் தோற்றம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. இப்போது மணிரத்னம் படத்தில் தக் லைப் படத்தில் நடித்து வருகிறார். காட்சிப்படி மூக்கில் ஒரு குத்துப்பட்டு கமலின் மூக்கு கொஞ்சம் வீங்கியது போல இருக்க வேண்டும்.
இதற்காக மூக்கில் நுழையும்படி ஒரு சின்ன இரும்பு ராடை ரெடி பண்ண சொல்லி காலை முதல் மாலை வரை அதை மூக்கினுள் வைத்திருந்தாராம். அதனால் மூக்கு வீங்கியது போல இருக்க காட்சி சிறப்பாக வந்திருக்கிறது. மாலை ஷூட்டிங் முடிந்து மூக்கினுள் இருந்து கமல் அதை எடுத்த பின்னர்தான் மணிரத்னம் உட்பட மற்றவர்கள் வியந்து போயிருக்கிறார்கள்.