ஜெட் வேகத்தில் மணிரத்னம் – கமல்!.. அதிர வைக்கும் தக் லைவ் ஸ்பெஷல் வீடியோ..

0
274
thug life

Thug life: கமலும், இயக்குனர் மணிரத்னமும் இணைந்து உருவான ஒரே திரைப்படம்தான் நாயகன். இந்த படம் 1987ம் வருடம் வெளியானது. இப்போது 36 வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் தக் லைப் என்கிற படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இந்த படத்தின் அறிவிப்பு ஒரு மாதத்திற்கு முன்பு வெளியானது.

பொன்னியின் செல்வன் படம் மூலம் பல வருடங்களுக்கு பின் மணிரத்னம் ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார். அதேபோல் விக்ரம் திரைப்படம் மூலம் கமல்ஹாசனும் மெகா ஹிட்டை கொடுத்தார். அதன்பின்னரே கமல் – மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

இதையும் படிங்க: அந்தப் படம்தான் காப்பாத்துச்சு.. அயோத்தியில் சிக்கி திணறிய தனுஷ்! தப்பிச்சேன்டா சாமி

இந்த படத்திற்கு தக் லைப் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. டைட்டில் வீடியோவை பார்த்த பலரும் இப்படம் ஒரு பீரியட் படம் என்றே நினைத்தனர். ஆனால், அது சமகாலத்தில் நடக்கும் கதைதான் என செய்திகள் வெளியானது. இந்த படத்தில் கமல் மட்டுமில்லாமல் துல்கர் சல்மான், ஜெயம் ரவி, கவுதம் கார்த்தி, மலையாள அடிகர் ஜோஜூ ஜார்ஜ், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி என பலரையும் மணிரத்னம் ஒப்பந்தம் செய்தார்.

thug life

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். மேலும், இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ், மணிரத்னம் ஆகியோர் இணைந்து தயாரிக்கவுள்ளனர். இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியானாலும் படப்பிடிப்பு துவங்கப்படாமலேயே இருந்தது. ஒருபக்கம், கமல் பல இயக்குனர்களின் படங்களில் நடிப்பதாக செய்திகளும் வெளிவந்தது.

இதையும் படிங்க: பென்ஸ் காரை தொட்டு பார்த்து அடி வாங்கிய மயில்சாமி!.. பிறந்தநாளில் அவருக்கு கிடைத்த சர்ப்பரைஸ்!..

இந்நிலையில், மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், தக் லைப் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி கமல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாக துவங்கியுள்ளது.

இந்த படத்தை முடித்துவிட்டு ஹெச்.வினோத் மற்றும் சண்டை காட்சி இயக்குனர்கள் அன்பறிவு ஆகியோர் இயக்கும் இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் கமல் நடிக்க விருக்கிறார். அதேபோல், தெலுங்கில் பிரபாஸும் கல்கி படமும் கமலின் லைன் – அப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

google news