தக் லைஃப்ல கமல் செய்த மேஜிக்... விஸ்வரூபமா, குருதிப்புனலா? இப்படி தெறிக்க விடுறாரே!

by sankaran v |   ( Updated:2024-11-08 21:18:02  )
thug life
X

thug life

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு நடித்து வரும் தக் iஃப் படத்தோட கிளிம்ப்ஸ் ரிலீஸ் ஆனது. தொடர்ந்து தற்போது டீசர் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தோட டீசர் குறித்து பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு சொல்வது இதுதான்.

தக் லைஃப் டீசர்ல கமல் மிரட்டிருக்காரு. அதுவும் இளமையான குருதிப்புனல் கெட்டப் மாதிரி கமல் வந்துட்டுப் போறாரு. மணிரத்னம் காம்போவில் ரொம்ப அருமையா நடிச்சிருக்காரு.

மணிரத்னத்துக்கு சிம்புவை நடிக்க வைக்கணும்னு ஆசை. இந்த டீசரில் ஒரு காட்சியில் கைதி மாதிரியான உடையில் ரத்தக்கறையோடு பாய்ந்து வருகிறார். ஒரு பக்கம் விஸ்வரூபம் கமல், இன்னொரு பக்கம் குருதிப்புனல்.

Also read: Jayam Ravi: பிரதர் படத்தின் ரிசல்ட்!.. அடுத்த படத்துக்கும் ஆப்புதானா?!.. புலம்பும் தயாரிப்பாளர்!…

'என்னய்யா இந்த வயசுலயும் மனுஷன் இப்படி பண்றாரே'ன்னு பார்க்கும்போது ஆச்சரியமா இருக்கு. விக்ரம் படத்தோட இந்தத் தலைமுறையே கமலை மறந்துடும்னு சொன்னாங்க.

அவர் லட்டர் பேடு கட்சி. டெபாசிட் வாங்குவாரு. வாங்கமாட்டாருன்னுலாம் சொன்னாங்க. அப்படியே போயிடுவாருன்னாங்க. ஆனா படம் பெரிய அளவில் ஹிட் அடிச்சி அவரை எங்கேயோ கொண்டு போயிடுச்சு. படத்துல ரங்கராயர் சக்திவேல் நாயக்கர். யார் இவர்? இதுவரைக்கும் என்ன கதைன்னு தெரியலை. முதல்ல வந்த கிளிம்ப்ஸ்சுக்கும், இந்த டீசருக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லை.

thuglife

thuglife

ஒருவேளை அதை சும்மா காமிச்சி ஏமாத்தி வேறொரு கதையைக் கொண்டு போறாங்களா? ஏன்னா இந்த மாதிரி மேஜிக்லாம் கமல் பண்ணுவாரு. அல்லது மணிரத்னம் மாற்றி இருக்காரான்னு தெரியல. ஆனா தக்லைஃப்போட கதையா இதைத் தான் சொல்றாங்க.

18ம் நூற்றாண்டில் 'தக்' என்கிற கொள்ளைக்கூட்டக் கும்பல். அதாவது சாலை வழியாகப் போகிற நபர்களைக் கொன்று கொலை செய்யும் கும்பல் தான் அது. அவர்கள் ஆங்கிலேயரையே போட்டுத் தாக்குகிறார்கள்.

அவர்கள் தக் கும்பலின் பின்னணியை அலசி ஆராய்ந்து அவர்களைப் படிப்படியாகக் கொல்கிறார்கள். அவர்களின் கண்ணில் மண்ணைத் தூவி தப்பித்தவர்கள் சிலர் இருக்காங்க. அவர்களின் பின்னணி தான் இந்தக்கதை. 25.6.2025 தான் படத்தோட ரிலீஸ் தேதி. காஞ்சிபுரம், புதுச்சேரி, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புத்தூர் ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story