“துணிவு” படத்திற்கு சென்சார் போர்டு போட்ட முட்டுக்கட்டை… இப்படி ஏமாத்திட்டாங்களேப்பா!!
விஜய்யின் “வாரிசு” திரைப்படமும் அஜித்தின் “துணிவு” திரைப்படமும் வருகிற 11 ஆம் தேதி ஒரே நாளில் வெளியாகவுள்ளதால், இந்த வருட பொங்கல் பண்டிகை ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையவுள்ளது.
உலகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் “வாரிசு” மற்றும் “துணிவு” ஆகிய திரைப்படங்களுக்கான முன்பதிவு புயல் வேகத்தில் நடைபெற்று வருகிறது. சில திரையரங்குகளில் முதல் ஷோ டிக்கெட் விலை 1000 ரூபாய்க்கு விற்கப்படுவதாக பல தகவல்கள் வெளிவருகின்றன. எனினும் ரசிகர்கள் 2000 ரூபாய்க்கு டிக்கெட் விற்றால்கூட வாங்க தயாராக இருக்கிறார்களாம். அந்த அளவுக்கு மிகவும் ஆவலோடு இத்திரைப்படங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து சமீபத்தில் “துணிவு” திரைப்படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியிருந்தது. மேலும் பல கெட்ட வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு செய்தி வெளிவந்தது.
இந்த நிலையில் சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் “துணிவு” திரைப்படத்திற்கு அங்குள்ள சென்சார் போர்டு ஒரு முட்டுக்கட்டையை போட்டுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
இதையும் படிங்க: “காக்க காக்க” பார்ட் 2 ரெடி?? சூர்யாவுக்கு வில்லனாக களமிறங்கும் வெரைட்டி நடிகர்… திடீர்ன்னு இப்படி ஷாக் கொடுத்தா எப்படி??
அதாவது சிங்கப்பூரில் உள்ள சென்சார் போர்டு “துணிவு” திரைப்படத்திற்கு NC16 சான்றிதழ் அளித்துள்ளதாம். இதன் மூலம் 16 வயதிற்கு உட்பட்டவர்கள் இத்திரைப்படத்தை திரையரங்குகளில் பார்க்கமுடியாது.
அதே போல் மலேசியாவில் உள்ள சென்சார் போர்டு “துணிவு” திரைப்படத்திற்கு 18SG சான்றிதழ் அளித்துள்ளதாம். இதன் மூலம் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் இத்திரைப்படத்தை திரையரங்குகளில் பார்க்கமுடியாது. ஆதலால் மலேசியா, சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் “துணிவு” திரைப்படத்தை திரையரங்குகளில் குடும்பத்துடன் ரசித்து பார்க்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.