துணிவு படத்தில் இந்த காட்சியை கவனிச்சீங்களா? இதுக்கு தானாம் இப்படி!..
Ajith: இயக்குநர் எச்.வினோத்தோடு அஜித் மூன்றாவது முறையாக இணைந்த படம்தான் துணிவு. 2023 பொங்கலையொட்டி வெளியான படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் குறைவைக்கவில்லை.
படத்தில் முக்கியமான சீக்வென்ஸாக சென்னை அண்ணாசாலையில் உள்ள வங்கி ஒன்றில் அஜித் கொள்ளையடிப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. இதற்காக சென்னை அண்ணா சாலை போன்ற மிக பிரமாண்டமான செட் ஹைதராபாத்தின் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் போடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன.
இதையும் படிங்க: வார இறுதிக்கு பக்கா ஸ்கெட்ச்… ஓடிடியில் வரிசை கட்டிய வெப்சீரிஸ்.. இதோ லிஸ்ட்..
வலிமை படத்தில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா மற்றும் இசையமைப்பாளர் தமன் ஆகியோருடனேயே இந்தப் படத்திலும் எச்.வினோத் பணியாற்றியிருப்பார். துணிவு படத்தில் நடன இயக்குநராக கல்யாண் மாஸ்டர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
படத்தின் முதல் பாதியில் வரும் அஜித்தின் மொத்த நடன அசைவுகளையும் கிட்டத்தட்ட 3 மணி நேரத்திலேயே கல்யாண் நடனம் அமைத்துக் கொடுத்துவிட்டாராம். வங்கிக்குள் கொள்ளை நடக்கையில் அஜித் ஆடிய மைக்கேல் ஜாக்சனின் பிரபலமான மூன்வாக் டான்ஸுக்குப் பின்னால் ஒரு காரணமும் இருக்கிறது.
வங்கிக் கொள்ளைக்காக வங்கிக்குள் நுழைந்தபிறகு போலீஸாருடன் குரலை மாற்றிப் பேசுவார் அஜித். அந்தக் குரல் பிரபலமான ஒருவருடையதாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்திருக்கிறார்கள். அப்போது அஜித், நீரவ் ஷா மற்றும் இயக்குநர் எச்.வினோத் ஆகியோர் கலந்துபேசி அதற்கு மைக்கேல் ஜாக்சன் குரலைப் போன்றதையே பயன்படுத்தலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: கோட்டை விட்ட தனுஷ்…தட்டி தூக்கிய நித்யா மேனன்… 2 தேசிய திரைப்பட விருதை வென்ற திருச்சிற்றம்பலம்..
இதையடுத்தே, வங்கிக் கொள்ளையின்போது மூன்வாக் டான்ஸ் ஆடலாம் என்று அஜித்தான் முதன்முதலில் யோசனை தெரிவித்திருக்கிறார். அந்த யோசனை எச்.வினோத், கல்யாண் மாஸ்டர் மற்றும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஆகியோருக்குப் பிடித்துப் போகவே அந்த மூன்வாக் நடனத்தை மிகவும் ரசித்து ஆடியிருப்பார் அஜித். அது அஜித் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.