துணிவு படத்தில் இந்த காட்சிக்கு மாஸ் பறக்கும்... வெளிவந்த சுவாரஸ்ய தகவல்...
அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் துணிவு படத்தில் குறிப்பிட்ட காட்சி ஒன்றுக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருக்கும் எனவும் பலராலும் ரசிக்கக்கூடும் என்றும் படக்குழு தரப்பில் இருந்து சுவாரஸ்ய தகவல்கள் ஒன்று வெளியாகி இருக்கிறது.
ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் மூன்றாவது திரைப்படம் துணிவு. இத்திரைப்படத்தினை போனி கபூர் தயாரித்து வருகிறார். பஞ்சாப்பில் நடந்த வங்கி கொள்ளையை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது.
இந்த படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா மற்றும் ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்தது. டப்பிங் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இப்படத்தில் முதன்முறையாக ஜான் கொக்கன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவரும் அஜித்தும் நேருக்கு நேர் சந்திக்கும் காட்சி மிக பெரிய ரீச்சை பெறும் என்றும் அதை தொடர்ந்து ஆக்ஷன் காட்சிக்கு தியேட்டரே அதிரும் எனவும் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இப்படத்திற்காக ஜான் கொக்கன் சொந்த குரலில் டப்பிங் செய்து இருக்கிறார்.
ஜிப்ரான் இசையில் பாடல்கள் வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாக இருக்கிறது. சில்லா சில்லா என்னும் பாடலை இப்படத்தில் அனிருத் பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல வருடங்களுக்கு பிறகு தை பொங்கலுக்கு விஜயின் வாரிசு படத்துடன் அஜித்தின் துணிவு திரைப்படம் மோத இருக்கிறது. இரு ரசிகர்களும் இந்த சந்தோஷத்தை கொண்டாட ஆர்வமாக காத்துக்கொண்டு இருக்கின்றனர்.