10 பேர்தான் வந்தாங்க… ஷோ கேன்சல்… “துணிவு” படத்துக்கு வந்த சோதனையை பாருங்க…

Thunivu
அஜித்தின் “துணிவு” திரைப்படமும், விஜய்யின் “வாரிசு” திரைப்படமும் கடந்த 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பல வருடங்கள் கழித்து அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளிவந்ததினால் திரையரங்குகள் திருவிழா கோலம்பூண்டன.
விஜய்யின் “வாரிசு” திரைப்படத்திற்கு பேமிலி ஆடியன்ஸ்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. எனினும் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களே எழுந்து வருகின்றன.

Thunivu
அஜித்தின் “துணிவு” திரைப்படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பையே பெற்று வருகிறது. குறிப்பாக “துணிவு” திரைப்படத்தில் அஜித்தின் நடிப்பு பலரையும் கவர்ந்துள்ளது.
இந்த நிலையில் அஜித்தின் “துணிவு” திரைப்படத்திற்கு பார்வையாளர்கள் வராததால் ஷோ கேன்சல் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று தமிழ்நாட்டில் நடந்துள்ளது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ள ஒரு திரையரங்கில் கடந்த 11 ஆம் தேதி காலை 7 மணி காட்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதாவது 7 மணி காட்சிக்கு வெறும் 11 பேர்தான் வந்திருக்கிறார்கள். ஆதலால் அந்த காட்சி கேன்சல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த தகவல் அஜித் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: நயன்தாரா கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்காததற்கு இப்படி ஒரு காரணம் இருக்கா?? இது தெரியாம போச்சே!!

Thunivu
7 மணி காட்சிக்கு பார்வையாளர்கள் ஏன் வரவில்லை என்பது குறித்து அப்பகுதியில் உள்ள மக்களிடம் கேட்கப்பட்டபோது, நள்ளிரவு 1 மணி மற்றும் 4 மணி காட்சிகள் திரையிடப்படும் செய்திதான் தெரியுமே தவிர 7 மணி காட்சி திரையிடப்போவதாக எந்த அறிவிப்பும் வரவில்லை என கூறினார்களாம்.