துணிவு படம் என்னை ஏமாத்திடுச்சி!.. பெரும் கனவோடு வந்த ஸ்டண்ட் இயக்குனர்!..
அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் வரும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகின்ற திரைப்படம் ‘துணிவு’. இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க ஜிப்ரான் இசையில் படம் தயாராகியிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புகளுடன் படத்தை பார்க்க மக்கள் மிகவும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
படத்தின் பாடல்கள் , டிரெய்லர் என படத்தின் மீதான ஆர்வத்தை இன்னும் அதிகமாக்கியிருக்கிறது. இந்த நிலையில் அஜித் படம் என்றாலே ரேஸ் சம்பந்தமான காட்சிகள் கண்டிப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பாப்பார்கள். கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தில் கூட முக்கால் வாசி காட்சிகள் பைக் ரேஸ், கார் சேஸ் என சண்டைக்காட்சிகளை அசத்தியிருப்பார்கள்.
இதையும் படிங்க : நடிப்புக்காக கூட அதை செய்ய மாட்டேன்!.. தியாகராஜ பகவாதர் மீது எம்ஜிஆர் வைத்திருந்த பாசம்!..
அஜித் என்றாலெ ரேஸுக்க் பஞ்சமிருக்காது என்று தான் அனைவரும் நினைப்பார்கள். அதே நிலையில் தான் இந்த படத்தில் பணியாற்றிய ஸ்டண்ட் இயக்குனரான சுப்ரீம் சுந்தரும் வந்திருக்கிறார். அஜித்திற்கு ஏற்றாற் போல மாஸாக ஒரு ஃபைட்டை வைக்க வேண்டும் என்ற கனவுடன் வந்தாராம்.
ஆனால் இயக்குனர் வினோத் இது எப்போதும் உள்ள அஜித் படம் இல்லை. கொஞ்சம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என கூறியிருக்கிறார். மேலும் அஜித்தும் சுப்ரீம் சுந்தரிடம் ஸ்டண்டில் ரியாலிட்டி இருக்க வேண்டும், எனக்காக ஃபேண்டஸி வைக்கவேண்டும் என்று எதுவும் பண்ண வேண்டாம், கீழே விழுவதில் இருந்து அடிவாங்குவதில் இருந்து எல்லாமே ரியாலிட்டியாக காட்ட வேண்டும் என கூறினாராம் அஜித்.
இதை கேட்டதும் சுப்ரீம் சுந்தருக்கு கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்ததாம். ஏனெனில் அஜித் படம் என்று விதவிதமாக மாஸாக காட்சிகளை காட்ட வேண்டும் என பெரும் கனவோடு வந்தேன். ஆனால் அப்படி எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டார்கள். மேலும் துணிவு படத்தில் பைக் சம்பந்தமான எந்தக் காட்சிகளும் இல்லை என்றும் கூறினார்.
சுப்ரீம் சுந்தர் துணிவு படத்தின் மூலம் முதன் முறையாக அஜித்துடன் இணைகிறார். இதற்கு ஐயப்பனும் கோசியும் மற்றும் பல மலையாள படங்களில் பணிபுரிந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.