இது வேறமாறி வெற்றி!.. ஓடிடி தளத்தில் துவம்சம் பண்ண துணிவு.. இத்தனை கோடி பேர் பார்த்துருக்காங்களா!

by Saranya M |   ( Updated:2023-12-14 14:59:57  )
இது வேறமாறி வெற்றி!.. ஓடிடி தளத்தில் துவம்சம் பண்ண துணிவு.. இத்தனை கோடி பேர் பார்த்துருக்காங்களா!
X

AK 62 அறிவிப்பு வெளியானதுமே அந்த படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விடாமுயற்சி என அந்த படம் டேக் ஆஃப் ஆகும் முன்னே பல கோடிகளை சம்பாதித்து கொடுத்துள்ளது. அதற்கு காரணம் நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்த ஆண்டு வெளியான துணிவு படம் நடத்திய மேஜிக் தான் என்கிற சூப்பரான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் இந்த ஆண்டு முதன்முறையாக தங்களது தளத்தில் அதிக பார்வைகளை அள்ளிய படங்கள் மற்றும் வெப் சீரிஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: ரொம்ப மோசம்.. பாத்ரூம் கூட இல்லை!.. அந்த இடத்துல இன்ஃபெக்‌ஷன் வந்துடுச்சு.. அம்மு அபிராமி கதறல்!..

அதில், தமிழ் சினிமாவில் அதிகபட்ச பார்வைகளை அள்ளிய படமாக அஜித்தின் துணிவு படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. சுமார் 2.5 கோடி பேர் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அஜித்தின் துணிவு படத்தை பார்த்துள்ளனர்.

இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார், மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கன், பிக் பாஸ் பிரபலங்களான அமீர், பாவனி மற்றும் சிபி உள்ளிட்ட பலர் நடித்த துணிவு திரைப்படம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது.

இதையும் படிங்க: முந்தானை முடிச்சு படத்தில் பாக்கியராஜ் வைத்த டயலாக் பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா..?

விஜய்யின் வாரிசு படத்துடன் மோதி அஜித்தின் துணிவு திரைப்படம் வசூலில் அந்த படத்தை முந்த முடியவில்லை என்றாலும், ஓடிடியில் அதிகம் பேர் அதிக நேரம் பார்த்த படமாக மாறியுள்ளது. துணிவு படத்தைத் தொடர்ந்து தனுஷின் வாத்தி மற்றும் விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி படங்கள் 2வது மற்றும் 3வது இடத்தை பிடித்துள்ளன. இது இந்த ஆண்டின் முதல் 6 மாத ரிப்போர்ட் மட்டும் தான் என்றும் அடுத்த 6 மாதத்தில் தான் நெட்பிளிக்ஸில் ஷாருக்கானின் ஜவான் மற்றும் சமீபத்தில் விஜய்யின் லியோ உள்ளிட்ட படங்கள் வெளியாகி உள்ளன.

Next Story