துப்பாக்கியில் அந்த நடிகையை மிஸ் பண்ண தளபதி!.. அதுக்கு ஸ்ரீதேவிதான் காரணமாம்!..

விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த துப்பாக்கி படத்தில் அவருக்கு ஜோடியாக முதலில் நடிக்க இருந்த பிரியா ஆனந்த்தானாம். அந்தப் படத்தில் அவர் நடிக்காமல் போனதற்கான காரணம் என்ன தெரியுமா?

நடிகர் விஜய்யின் சினிமா பயணத்தை துப்பாக்கிக்கு முன்… துப்பாக்கிக்குப் பின் என இரண்டாகப் பிரிக்கலாம். அவர் படங்களின் மார்க்கெட்டையும் வசூலையும் வேறொரு பரிணாமத்துக்குக் கொண்டு சென்ற படம்தான் துப்பாக்கி. அந்தப் படத்தில் ஹீரோயின் கஜோல் அகர்வாலுக்கும் முக்கியமான இடம் கொடுக்கப்பட்டிருக்கும்.

இதையும் படிங்க: இன்னைக்கு கண்டிப்பா வந்துடும்!.. கையெடுத்து கும்பிட்ட வெங்கட்பிரபு!.. பாவம் விட்ருங்கப்பா!…

குத்துச்சண்டை வீராங்கனையாக வரும் அவருக்கு காமெடி காட்சிகளிலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். அப்படியான ரோலில் முதலில் நடிக்க இருந்தது நடிகை பிரியா ஆனந்த். இங்கிலீஷ் விங்கிலீஷ் இந்திப் படத்தின் ஷூட்டிங் அமெரிக்காவில் நடந்துகொண்டிருந்தபோது ஏ.ஆர்.முருகதாஸ் அவரை துப்பாக்கி படத்துக்காக அணுகியிருக்கிறார். கால்ஷீட் ஒதுக்க முடியாத நிலையில், அந்த வாய்ப்பு கைநழுவிப் போனதாம்.

2009-ல் ஜெய் நடித்த வாமனன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியா ஆனந்த். சினிமாவில் பணிபுரிய வேண்டும் என்கிற எண்ணத்தில் அமெரிக்காவில் முதுகலை படித்துமுடித்தவுடன் சென்னை திரும்பிய அவர், இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராகப் பணிபுரிய வேண்டும் என்று நினைத்திருக்கிறார். ஆனால், எதிர்பாராத விதமாக நடிகையானார்.

இதையும் படிங்க: என்னுடைய பயோபிக்கை இவர்தான் எடுக்கனும்! பிரசாந்தின் ஆசையை நிறைவேற்றுவாரா?

சிறுவயது முதலே ஸ்ரீதேவி என்றாலே பிரியா ஆனந்துக்கு கொள்ளைப் பிரியமாம். அப்படியான ஸ்ரீதேவி, தனக்கு முக்கியமான படமாகக் கருதும் ஒரு படத்தில் நடிப்பதோடு, அவருடன் நெருக்கமாகப் பழகக் கிடைத்த வாய்ப்பையும் விட மனதில்லாமலேயே பிரியா ஆனந்த் துப்பாக்கி வாய்ப்பை மறுத்தாராம்.

Akhilan

Recent Posts

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

6 hours ago

கலைஞர் குடும்பத்தை பார்த்து அரசியலுக்கு வர ஆசைப்பட்ட விஜய்!.. பிடி செல்வகுமார் ஓபன்..

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…

9 hours ago

அரசன் படத்துக் கதை இதுதாங்க… சிவகார்த்திகேயன் படத்தோடு சிம்பு மோதுகிறாரா?

நடிகர் சிம்பு தற்போது நடித்து வரும் அரசன் படத்தை வெற்றி மாறன் இயக்கி வருகிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். இதே…

10 hours ago

இயக்குனர் பாரதிராஜா எப்படி இருக்கிறார்?!.. வெளியான போட்டோ!…

பதினாறு வயதினிலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் பாரதிராஜா. அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கி…

1 day ago

யோகிபாபுவின் அட்ராசிட்டி!.. கண்டிக்காத ரஜினி!.. ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் நடந்தது என்ன?..

தமிழ் சினிமாவில் தற்போது விவேக் இல்லை. கவுண்டமணி நடிப்பதில்லை.. வடிவேலுக்கு ரிட்டயர்ட் ஆகும் வயதாகிவிட்டது. அதோடு, அவரின் காமெடியும் எடுபடவில்லை.…

1 day ago

Siragadikka Aasai: ரோகிணிக்கு செம செக் வைத்த முத்து, மீனா… இதாவது ஜெயிக்குமா?

Siragadikka aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைய எபிசோட்டில் ரோகிணிக்கு எதிராக சரியான காயை…

1 day ago