‘துப்பறிவாளன்’ படம் விஷாலுக்கு எழுதுனதே இல்ல! முதலில் யார் நடிக்க இருந்தார் தெரியுமா?

Published on: May 13, 2024
vishal
---Advertisement---

Thupparivalan Movie: தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக இப்போது ஒரு சிறந்த நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் மிஷ்கின். ஆரம்பத்தில் இயக்குனராக இருந்த மிஷ்கின் சமீப காலமாக பல திரைப்படங்களில் நல்ல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் அபிமானங்களை பெற்று வருகிறார். இவர் இயக்கிய பிசாசு,  ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற பெரும்பாலான திரைப்படங்கள் துப்பறியும் கதை கொண்ட திரைப்படமாகவே அமைந்திருக்கின்றன.

அந்த வகையில் இவர் இயக்கிய படமான துப்பறிவாளன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. 2017 இல் வெளிவந்த இந்த படத்தில் விஷால் ,பிரசன்னா, அணு இம்மானுவேல், ஆண்ட்ரியா, வினய், பாக்கியராஜ் போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர். சிம்ரன் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்.

இதையும் படிங்க: இளையராஜா போடுறது வேஷம்!.. அது யாருக்கும் புரியாது!.. உண்மைகளை உடைக்கும் பிரபலம்..

துப்பறியும் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டது. கணியன் பூங்குன்றனார் என்ற ஒரு நேர்மையான துப்பறியும் அதிகாரியாக விஷால் இந்த படத்தில் நடித்திருப்பார். அவருக்கு உதவியாளராக மனோகரன் என்ற கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்திருப்பார். படத்தின் வில்லனாக வினய் நடிக்க ஆண்ட்ரியா யாரும் எதிர்பாராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருப்பார்.

இந்த படத்தின் வெற்றி அடுத்ததாக துப்பறிவாளன் இரண்டாம் பாகம் உருவாக காரணமானது. ஆனால் அதற்குள் விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து மிஷ்கின் விலக அந்தப் படத்தை விஷாலே இயக்கி அதில் நடிக்கவும் செய்கிறார். இந்த நிலையில் துப்பறிவாளன் படத்தின் கதை முதலில் விஷாலுக்கு எழுதப்படவில்லை என மிஷ்கின் சமீபத்திய ஒரு விழா மேடையில் கூறியிருக்கிறார். அது முழுக்க முழுக்க சரத்குமாரை மனதில் வைத்து அவருக்காக எழுதப்பட்ட கதைதான். அதன் பிறகு சில பல காரணங்களால் இந்த கதை விஷாலிடம் சென்றது என அந்த மேடையில் மிஷ்கின் கூறினார்.

இதையும் படிங்க: வீட்டில் ஒரு முகம்.. வெளியே ஒரு முகம்!.. ரஜினி வீட்டில் நடப்பது என்ன?…

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.