‘ஜெய்லர்’ வசூலை முறியடிக்க பலே திட்டம்! ஒரு மாசத்துக்கு முன்பே பட்டரையை போட்ட‘லியோ’ குழு - இது ஓவர்தான்

by Rohini |
jail
X

jail

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக விஜய்க்கும் ரஜினிக்கும் இடையேயான போட்டி பெரிய பனிப்போராக இருந்து வருகிறது. இரு தரப்பிலும் எந்தவொரு பதிலும் சொல்லாத நிலையில் ரசிகர்களை தூண்டி விடும் சில சம்பவங்களும் நடந்து வருகின்றன. ஜெய்லர் படம் ரிலீஸாகி மாஸ் வெற்றியை பதிவு செய்தது.

இதை வைத்தே ரஜினி ரசிகர்கள் விஜய் ரசிகர்களை சரமாரியாக தாக்கி சமூக வலைதளங்களில் திட்டி பேசிவந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜயின் பேச்சும் இருக்கும் என்றும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இதையும் படிங்க : லியோ படம் சுறா2 தான்… மாட்டு சந்தை மாதிரி இத்தன பேரையா எறக்குவானுங்க… இப்படியா டக்குனு சொல்லுவீங்க!

இந்த நிலையில் ஜெய்லர் படத்தின் மொத்த வசூல் கிட்டத்தட்ட 600 கோடியை நெருங்கி விட்டதால் அதை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு லியோ படமும் களமிறங்க இருக்கிறது. அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி லியோ திரைப்படம் உலகமெங்கிலும் ரிலீஸ் ஆகின்றது.

அதற்கான டிக்கெட் முன்பதிவுகளும் கூடிய சீக்கிரம் தொடங்கப்படும். பெரும்பாலும் டிக்கெட் முன்பதிவுகள் பட ரிலீஸ் ஆவதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் தொடங்கும். ஆனால் லியோ படத்தின் டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 10 ஆம் தேதியே தொடங்க இருக்கிறதாம்.

அதுவும் கனடா மற்றும் யுகே போன்ற நாடுகளில் இந்த மாதிரி முன்பதிவை நடத்த இருக்கிறார்களாம். ஏனெனில் ஜெய்லர் படத்திற்கு வெளி நாடுகளில் தான் கலெக்‌ஷன் அதிகமாக அள்ளியது. அதை எப்படியாவது நெருங்க வேண்டும் என்ற எண்ணத்தில் செப்டம்பர் மாதமே முன்பதிவை தொடங்க திட்டமிட்டிருக்கிறார்களாம்.

இதையும் படிங்க: வடிவேலு சரியான ஆளுங்க… குத்தமா சொல்லல… சும்மா சொல்லணும்னு தோணிச்சு… பகீர் கிளப்பிய பயில்வான்

இந்த செய்தி கோடம்பாக்கத்தில் இருப்பவர்களை சற்று வியப்படைய வைக்கிறது. இது என்னடா கொடுமை? போட்டி இருக்க வேண்டியதுதான். அதற்காக ஒரு வருஷத்திற்கு முன்பே முன்பதிவை நடத்துவதா? என்று ஆதங்கத்தில் கூறிவருகிறார்கள்.

Next Story