குக் வித் கோமாளி புகழ் மீது பாய்ந்து வந்த புலி… படப்பிடிப்பில் நடந்த ஷாக்கிங் சம்பவம்… கேட்டாலே குலை நடுங்குதே!!

Published on: January 17, 2023
Mr.Zoo Keeper
---Advertisement---

“வேலை”, “என்னவளே”, “ஜூனியர் சீனியர்” போன்ற திரைப்படங்களை இயக்கியவர் ஜெ.சுரேஷ். இவர் தற்போது குக் வித் கோமாளி புகழை வைத்து “மிஸ்டர் ஜூ கீப்பர்” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

J Suresh and Pugazh
J Suresh and Pugazh

“மிஸ்டர் ஜூ கீப்பர்” திரைப்படத்தில் புலி பராமரிப்பாளராக புகழ் நடித்து வருகிறார். இயக்குனர் சுரேஷ், இத்திரைப்படத்தில் நிஜ புலியை வைத்து படமாக்க வேண்டும் என முடிவு செய்தார். இந்தியாவில் அதற்கான அனுமதி இல்லை என்பதால் பிலிப்பைன்ஸ் நாட்டில் பயிற்றுவிக்கப்பட்ட புலி ஒன்றை பயன்படுத்தி இத்திரைப்படத்தை எடுத்து முடித்திருக்கின்றனர்.

“மிஸ்டர் ஜூ கீப்பர்” திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த ஒரு ஷாக்கிங் சம்பவத்தை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜெ.சுரேஷ் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இதையும் படிங்க: பிரம்மாண்ட வரலாற்று படத்தில் இருந்து விலகும் ஜெயம் ரவி… அப்போ ராஜாவா யார்ப்பா நடிக்கிறது??

Pugazh
Pugazh

புகழ் புலியை குளிப்பாட்டுவது போன்ற ஒரு காட்சியை படக்குழுவினர் படமாக்கிக்கொண்டிருந்தபோது, அத்திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த நடிகை கையில் வைத்திருந்த ஸ்ப்ரே ஒன்றை புலியின் முகத்தில் அடித்துவிட்டாராம். அது புலிக்கு எரிச்சலையூட்ட அப்புலி, தன்னை குளிப்பாட்டிக்கொண்டிருந்த புகழின் மேல் பாயப்போனதாம்.

தன் மேல் பாய வந்த புலியை பார்த்து பயந்துபோன புகழ், பின்னால் இருந்த வாட்டர் டேங்குக்குள் கவிழ்ந்து விழுந்துவிட்டாராம். புலியை செயின் போட்டு கட்டிப்போட்டிருந்ததால் புகழ் தப்பித்தாராம். இல்லை என்றால் அன்று நடந்திருப்பதே வேறு என்று அப்பேட்டியில் ஜெ.சுரேஷ் அச்சம்பவத்தை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.