எம்ஜிஆருக்கே அப்படினா? விஜயின் நிலைமை? காட்டமாக பேசிய திருப்பூர் சுப்பிரமணியன்

mgr
Vijay: பிரபல சினிமா திரைப்பட தியேட்டர் உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியன் இன்றைய சினிமாவின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை பற்றி பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதாவது கடந்தாண்டு அமரன் திரைப்படத்தை விட வேறெந்த பெரிய நடிகர்களின் படங்கள் சரியாக போகவில்லை. அமரன் திரைப்படம் தான் தி பெஸ்ட் திரைப்படமாக அமைந்தது.
ஆனால் சமீபத்தில் வெளியான வீர தீர சூரன் படத்தின் இரண்டாவது நாளே வினியோகஸ்தர்கள் சூர்யாவுக்கும் எஸ்.ஜே. சூர்யாவுக்கும் பெரிய ஆளுயர மாலையை போட்டு வெற்றி என பதிவிட்டனர். எங்க இருந்து வந்தது வெற்றி? படம் சுமாரான படம்தான். வசூலும் சுமார்தான். இதில் தயாரிப்பாளர்களும் வினியோகஸ்தர்களும் சேர்ந்து செய்கிற இந்த மாதிரியான தவறால் அடுத்து விக்ரம் அவருடைய சம்பளத்தை அதிகப்படுத்ததான் பார்ப்பார்.
விக்ரம் ‘ஒருவேளை இந்தப் படம் வெற்றிப்படம்தான் என நினைத்து சம்பளத்தை கூட்டத்தான் பார்ப்பார் ’. தயாரிப்பாளர்கள் தான் இந்த தவறை செய்கிறார்கள். ஆரம்பத்தில் எல்லா நடிகர்களும் இயக்குனர்கள் சொல்ற படிதான் நடித்தார்கள். ஆனால் விஜய், அஜித் காலத்துக்கு பிறகு அது முற்றிலும் மாறிவிட்டது. கதை சரியா தேர்ந்தெடுப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அந்த கதையில் தலையிடவும் செய்கிறார்கள்.

டாப் 10ல் இருக்கும் நடிகர்கள்தான் இந்த கதை தலையீட்டில் ஈடுபடுகிறார்கள் என திருப்பூர் சுப்பிரமணியன் கூறினார். மேலும் ஜன நாயகன் திரைப்படத்தின் எதிர்பார்ப்பை பற்றி திருப்பூர் சுப்பிரமணியத்திடம் கேட்ட போது எம்ஜிஆரின் கடைசி படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன். பெரிய எதிர்பார்ப்போடு இருந்த படம். ஆனால் படம் சுமாராத்தான் இருந்தது.
அதை போல் ஜன நாயகன் படம் விஜயின் கடைசி படம் என்பதற்காக ஓடுமா என்று இல்லை. படத்தில் சரக்கு இருக்க வேண்டும். அப்படி கதை இருந்தால் மட்டும்தான் அந்தப் படமும் ஜெயிக்கும் என திருப்பூர் சுப்பிரமணியன் கூறினார்.