சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், விநாயகன், வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, சுனில், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் அனிருத் இசையில் வெளியான ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் திரையிட்ட திரையரங்குகளில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு வெளியான விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு, மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2 உள்ளிட்ட படங்களின் வசூலை எளிதில் ஜெயிலர் படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கமல்ஹாசன் நடித்து கடந்த ஆண்டு வெளியான விக்ரம் படம் செய்த இண்டஸ்ட்ரி ஹிட் வசூலை ஜெயிலர் முறியடிக்குமா என்கிற கேள்விக்கு திருப்பூர் சுப்பிரமணியம் பதில் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: ஜெயிலர் வசூலுக்கு முதல் ஆளாக வாழ்த்திய விஜய்!.. காக்கா – கழுகு கதைக்கும் முற்றுப்புள்ளி வைத்த நெல்சன்!..
விக்ரம் vs ஜெயிலர் வசூல்:
கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் வசூல் நிலவரம் குறித்து ராஜ்கமல் நிறுவனத்துக்குத் தான் தெரியும். 400 கோடிக்கு மேல் வசூல் வந்துள்ளதாக கூறுகின்றனர். அதே போல ஜெயிலர் படத்தின் வசூல் நிலவரம் குறித்து சன் பிக்சர்ஸ்க்குத் தான் தெரியும். எங்களை பொறுத்தவரையில், புதிதாக ரிலீஸ் ஆகிற அத்தனை பெரிய படங்களும் தியேட்டருக்கு மக்களை கொண்டு வருகிறதா? இல்லையா? என்பதை மட்டும் தான் பார்ப்போம்.
பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் போட்டி எல்லாம் தேவையில்லாத சண்டையை உருவாக்கும். மீடியாக்களும், யூடியூப் சேனல்களும் தான் இதனை ஊதிப் பெரிதாக்கி ரசிகர்கள் சண்டையை மூட்டி விடுகின்றனர். விக்ரம் படம் நல்ல வசூலை பெற்றது. அதே போல ஜெயிலர் படமும் அமோகமான வசூலை பெறும், அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சும்மா இருந்த சங்க ஊதிக்கெடுத்த விஜய்!.. ஒரேயொரு படம் தான்!.. விஜய்யோட டோட்டல் பாக்ஸ் ஆபிஸும் காலி!..
லியோ ஜெயிலரை வீழ்த்துமா:
அடுத்ததாக வெளியாகும் விஜய்யின் லியோ படம் இந்த வசூலை முறியடிக்குமா என்கிற கேள்விக்கு, ஜெயிலர் படம் இப்போதைக்கு தியேட்டர் ஓனர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி வருகிறது. அதே போலத்தான் லியோ படம் வந்தாலும், மக்கள் தியேட்டருக்கு படையெடுத்து வருவார்கள், அடுத்ததாக தனுஷின் கேப்டன் மில்லர், சூர்யாவின் கங்குவா மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 என அனைத்து படங்களும் வசூலை குவித்தால் தமிழ் சினிமாவுக்குத் தான் அது மிகப்பெரிய லாபமாக இருக்கும். விஜய், ரஜினி ரசிகர்கள் சண்டையை தியேட்டர் உரிமையாளர்கள் எப்போதும் ஆதரிக்க மாட்டார்கள்.
இந்த ஆண்டு துணிவு மற்றும் வாரிசு படம் வரும்போதும் இப்படித்தான் பலரும் சொன்னார்கள். ஆனால், தியேட்டரில் என்ன போர்க்களமா நடந்தது. ஜெயிலர் படத்தை விஜய் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து கொண்டாடிவிட்டு போறாங்க, தேவையில்லாமல் சிலர் செய்யும் விஷமங்கள் பெரிதானபாதிப்பை உண்டாக்காது என திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 10 பெண்கள்!.. பலான விஷயத்தில் சிக்கிய ஜெயிலர் வில்லன்!.. யார் இந்த விநாயகன்?..
Director Atlee:…
பேய்ப்படங்களைப் பார்ப்பது…
நானும் விஜய்…
நடிகர் நாகார்ஜுனாவின்…
இன்று வெற்றிமாறன்…