நீர்நிலையைத் தாங்கி வந்த சூப்பர்ஹிட் படங்கள்
தமிழ்சினிமாவில் அருவி ஓரங்கள், ஆற்றின் கரைகளில் என்று படங்கள் எடுத்து ரசிகர்களைப் பரவசப் படுத்துவார்கள். படத்தில் உள்ள லொக்கேஷன்களைப் பார்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் திரையரங்கிற்கு வந்து செல்லும்.
படமும் எதிர்பாராத விதமாக ஹிட் அடித்து விடும். அந்த வகையில் தாமிரபரணி படம் மெகா ஹிட் ஆனது. இப்படிப்பட்ட ஒரு சில படங்களை இங்கு பார்ப்போம்.
தாமிரபரணி
2007ல் இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் வெளியான அதிரடி திரைப்படம். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். விஷால், பானு, பிரபு, நதியா, நாசர், கஞ்சா கருப்பு, நிழல்கள் ரவி உள்பட பலர் நடித்துள்ளனர்.
கருப்பான கையாலே, கட்டப்பொம்மன் ஊரெனக்கு, வார்த்தை ஒண்ணு, தாலியே தேவையில்லே, திருச்செந்தூரு முருகா உள்பட பல பாடல்கள் உள்ளன.
வைகை
2009ல் வெளியான படம். எல்.ஆர்.சுந்தரபாண்டியன் இயக்கிய படம். பாலா ஜோசப், விசாகா சிங், சாய் குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். சபேஷ்-முரளி இசை அமைத்துள்ளனர். ஆயிரம் தாமரை, ஏன் கவிதை, ஆசையை காட்டி ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
மகாநதி
1994ல் வெளியான படத்தில் கமல், சுகன்யா, கொச்சி ஹனீபா, மகாநதி சங்கர், சங்கீதா, தலைவாசல் விஜய், பூர்ணம் விஸ்வநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தானபாரதி இயக்கியுள்ளார்.
இந்தப்படம் லேட் பிக் அப் ஆனது. படத்தைப் பார்த்ததும் கமலின் நடிப்பைப் பாராட்டாதவர்களே இருக்க முடியாது.
அருவி
2017ல் வெளியான படத்தை அருண்பிரபு, புருஷோத்தமன் ஆகியோர் இயக்கினர். அதிதி பாலன், அஞ்சலி வரதன், லட்சுமி கோலாசாமி உள்பட பலர் நடித்துள்ளனர். இது ஒரு கலைப்படம்.
காவேரி
1955ல் வெளியான இப்படத்தை டி.யோகானந்த் இயக்கினார். சிவாஜிகணேசன், நம்பியார், பி.எஸ்.வீரப்பா, என்.எஸ்.கிருஷ்ணன், பத்மினி, லலிதா, ராகினி, டி.ஏ.மதுரம் உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஜி.ராமநாதன், விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆகியோர் இசை அமைத்துள்ளனர். மஞ்சள் வெயில் மாலையிலே, என் சிந்தை நோயும் தீருமா, அன்பே என் ஆருயிரே அங்கு நிற்பதேனோ உள்பட பல பாடல்கள் இடம்பெற்றுள்ளன.