எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் போன்ற தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களின் மிகப் பிரபலமான பாடல்களை பாடியவர்களில் மிக முக்கியமான லெஜண்டாக திகழ்ந்தவர் டி.எம்.சௌந்தரராஜன். இவரின் குரல் இப்போதும் கூட தமிழ்நாட்டின் பட்டித் தொட்டி எங்கும் ஒலித்துக்கொண்டிருந்தது. மிகவும் பழம்பெரும் பாடகராக திகழ்ந்த டி.எம்.சௌந்தரராஜனுக்கு நேற்று 100 ஆவது பிறந்தநாள். ஆதலால் சமீப நாட்களாக டி.எம்.சௌந்தரராஜனின் நினைவலைகளை பலரும் அசைப்போட்டுக்கொண்டிருக்கின்றனர்.
எல்லாம் ரசிகருக்காக…
இந்த நிலையில் டி.எம்.எஸ் தனது ரசிகருக்காக செய்த ஒரு அசாத்திய செயல் குறித்து தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அது என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
டி.எம்.எஸ் மிகப் புகழ்பெற்ற பாடகராக வளர்ந்து வந்த பிறகு அவருக்கு பல ரசிகர்கள் உருவாகியிருந்தார்கள். மேலும் தனக்கு கடிதம் எழுதும் ரசிகர்களிடம் மிகத் தீவிர அன்புகொண்டிருந்தார் டி.எம்.எஸ். இந்த நிலையில் திண்டுக்கலை சேர்ந்த அர்ஜூனன் என்ற ஒரு ரசிகர், “டி.எம்.எஸ் தாலி எடுத்துக்கொடுத்தால்தான் திருமணம் செய்துகொள்வேன்” என கூறியிருக்கிறார். பெண் வீட்டார்கள் டி.எம்.எஸ்ஸை சந்தித்து இந்த தகவலை கூறியிருக்கிறார்கள். டி.எம்.எஸ்ஸும் நிச்சயமாக திருமணத்தில் கலந்துகொண்டு தாலி எடுத்து தருவதாக கூறியிருக்கிறார்.
கடுமையான காய்ச்சல்
ஆனால் திருமணத்திற்கு முந்தைய நாள் டி.எம்.எஸ்ஸுக்கு கடுமையான காய்ச்சல் வரத்தொடங்கியிருக்கிறது. ஆதலால் இந்த தகவலை தனது ரசிகரிடம் தெரியப்படுத்தியுள்ளார். ஆனால் ரசிகரோ, டி.எம்.எஸ் எப்போது வருகிறாரோ அப்போது தாலி கட்டுவதாக அடம்பிடித்திருக்கிறார். இந்த விஷயம் டி.எம்.எஸ்ஸுக்கு தெரியவர அந்த கடும் காய்ச்சலையும் பொருட்படுத்தாது டி.எம்.எஸ் திண்டுக்கலுக்கு பயணித்து தாலி எடுத்துக்கொடுத்திருக்கிறார். இவ்வாறு தனது உடல்நிலையை கூட பொருட்படுத்தாது தனது ரசிகருக்காக பல மணி தூரம் பயணித்து தாலி எடுத்துக்கொடுத்து திருமணத்தை நல்லபடியாக நடத்தி வைத்திருக்கிறார்.
இதையும் படிங்க: பாலியல் அத்துமீறலுக்கு உள்ளான பாவனா… அந்த டாப் நடிகர் சிக்கியது எப்படி தெரியுமா? சினிமா பாணியில் ஒரு உண்மை சம்பவம்…
அரவிந்த் சாமி…
தெலுங்கு நடிகர்…
மகனின் 2-வது…
VijayTV: விஜய்…
Nayanthara: கேரளாவை…