Cinema History
இதெல்லாம் என்னால முடியாது!.. பேச மறுத்த சிவாஜி!. அசால்ட் செய்த டி.எம்.எஸ்!.. அட அந்த பாட்டா!..
நடிகர் சிவாஜி கணேசனுக்கு பல படங்களிலும் பின்னணி பாடல்களை பாடியவர் டி.எம்.சவுந்தரராஜன். சிவாஜி நடிக்க துவங்கிய புதிதில் அவருக்கு பல பாடகர்கள் பாடினார்கள். ஆனால். டி.எம்.எஸ். போல பொருத்தமான குரல் அவருக்கு அமையவில்லை. டி.எம்.எஸ் பாடினால் அது சிவாஜி பாடுவது போலவே இருக்கும்.
ஒருபக்கம் எம்.ஜி.ஆருக்கு எல்லா பாடல்களை பாடினாலும் சிவாஜிக்கு குரலை மாற்றி அவருக்கு ஏற்றார் போல் பாடுவார் டி.எம்.எஸ். ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து சுதியிலிருந்து மாறி பாடுங்கள் என சொன்னாலும் அதை அவரால் செய்ய முடியாது என டி.எம். சவுந்தரராஜனை இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாராட்டி பேசுவார்.
இதையும் படிங்க: பராசக்தி காலகட்டத்திலேயே சிவாஜிக்கு இருந்த அந்த வெறி… அப்படியே நடந்துடுச்சே..!
மற்ற பாடகர்கள் பாடி இருந்தாலும் ஒரு கட்டத்தில் எனக்கு இனிமேல் டி.எம்.எஸ் மட்டுமே பாட வேண்டும் என சொல்லிவிட்டார் சிவாஜி. சிவாஜிக்கு பல காதல், சோக மற்றும் தத்துவ பாடல்களை பாடி அசத்தி இருக்கிறார். சட்டி சுட்டதா கை விட்டதடா, பாவாடை தாவணியில் பார்த்த உருவமா இது, எண்ணிரண்டு பதினாறு வயது என பல அருமையான பாடல்கள் இருக்கிறது.
ஞான ஒளி என்கிற படத்தில் சிவாஜிக்காக ஒரு பாடலை உருவாக்கினார் எம்.எஸ்.வி. காட்சிப்படி ஃபாதராக இருக்கும் சிவாஜி பாடலுக்கு நடுவே சில ஆங்கில வசனங்களை பேச வேண்டும். அதுவும் உரக்க கத்தி பேச வேண்டும். ஆனால் ‘இது என்னால் முடியாது. வேறு யாரைவது வைத்து பேச சொல்லுங்கள்’ என சிவாஜி சொல்லிவிட்டார்.
இதையும் படிங்க: சிவாஜியால் எம்ஜிஆருக்கு கிடைத்த பெரிய வெற்றி! ‘கூண்டுக்கிளி’க்கு பின் நடந்த அதிசயம்
இசைக்குழுவில் இருந்த பலர் பேசியும் திருப்தி ஏற்படவில்லை. அப்போது அங்கிருந்த இயக்குனர் கிருஷ்ணன் – பஞ்சு அந்த வசனங்களை டி.எம்.எஸ் சொல்லட்டும் என சொல்ல அப்படியே முடிவானது. அதன்பின், சிவாஜியிடம் அவர் ‘இந்த வசனங்களை நீங்கள் எப்படி சொல்லுவீர்கள்?’ என பேசிக்காட்டுங்கள் என சொல்லி அதை பார்த்துக்கொண்டார்.
அதன்பின் சிவாஜிக்கு ஏற்றார் போல் அழகாக பேசி அந்த பாடலை பாடினார் டி.எம்.எஸ். அதுதான் ‘தேவனே என்னை பாருங்கள்.. என் பாவங்கள் தம்மை வாங்கி கொள்ளுங்கள்’ என்கிற பாடல். இந்த பாடலின் நடுவே பல ஆங்கில வசனங்களை பேசி அசத்தி இருப்பார் டி.எம்.எஸ்.